பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]23


     நிதியந் திறையளந்தார் நேராருந் தன்கீழ்
     முதியமென் றாறி முரண்”                 
[பு. வெ. வஞ். 10]

எனவரும்.

     11. திண்ணியவேந்திற் சிறப்புற்றோர் பெறூஉம் வண்மைகூறிய
மாராயவஞ்சிக்குச்
செய்யுள்:-

     “நேராரம் பூண்ட நெடுந்தகை நேர்கழலான்
     சேரார் முனைநோக்கிக் கண்சிவப்பப்-போரார்
     நறவே கமழ்தெரிய னண்ணா ரெறிந்த
     மறவே லிலைமுகந்த மார்பு”
[பு. வெ. வஞ். 11]

எனவரும்.

     12. செறியலர் போர்க்களஞ் சென்றுதன்னாண்மை
நெறியெடுத்தியம்பிய நெடுமொழி வஞ்சிக்குச்
செய்யுள்:- (வஞ்சினம்)

     “இன்ன ரெனவேண்டா வென்னோ டெதிர்சீறி
     முன்னர் வருக முரணகலு-மன்னர்
     பருந்தார் படையமருட் பல்லார் புகழ
     விருந்தா யடைகுறுவார் விண்”*
              [பு. வெ. வஞ். 12]
 

எனவரும்.

     13. தொன்னெறிமரபின் வாட்குடித்தோன்றிய முன்னவனிலை
புகல் முதுமொழி வஞ்சிக்குச்
செய்யுள்:-

     “குளிறு முரசங் குணில்பாயக் கூடா
     ரொளிறுவாள் வெள்ள முழக்கிக்-களிறெறிந்து
     புண்ணொடு வந்தான் புதல்வற்குப் பூங்கழலோய்
     1 தண்ணடை நல்க றகும்”
                  [பு. வெ. வஞ். 13]

எனவரும்.

     4. கூடலர்நாட்டுக் கொடிநெடுவியலூர் ஓடெரியூட்டிய உழபுல
வஞ்சிக்குச்
செய்யுள்:-

     “அயிலன்ன கண்புதைத் தஞ்சி யலறி
     மயிலன்னார் மன்றம் படரக்-குயிலகவ

  * புறநா. 7, 16, 31.

  1 இது தன்மேம்பாட்டுரையணியுமாகும். - [இ - வி. 606]