வாடிரிய வண்டிமிருஞ் செம்ம லடையார்நாட்
டோடெரியுள் வைகின வூர்” [பு. வெ. வஞ். 14]
எனவரும்.
15. குறுகலரருமுனை கொள்ளைசாற்றி மறுகுறக்கவர்ந்த மழபுல
வஞ்சிக்குச் செய்யுள்:-*
“களமர் கதிர்மணி காலேகஞ் செம்பொன்
வளமனை பாழாக வாரிக்-கொளன்மலிந்து
கண்ணார் சிலையார் கவர்ந்தார் கழல்வேந்த
னண்ணார் கிளையலற நாடு” [பு. வெ. வஞ். 15]
எனவரும்.
16. நீடவுங் குறுகவு நிவப்பவுந் தூக்கிப் பாடிய பாணர்க்குப்
பயந்த கொடை வஞ்சிக்குச் செய்யுள்:-
“சுற்றிய சுற்ற முடன்மயங்கத் தம்வயி
றெற்றி மடவா ரிரிந்தோட-முற்றிக்
குரிசி லடையாரைக் கொண்டகூட் டெல்லாம்
பரிசின் முகந்தன பாண்” [பு. வெ. வஞ். 16]
எனவரும்.
17. மடுத்தவேந்தற்கு வழங்குவ வழங்கிக் குடிக்கருள்சுரந்த
குறுவஞ்சிக்குச் செய்யுள்:-
“தாட்டாழ் தடக்கைத் தனிமதி வெண்குடையான்
வாட்டானை வெள்ளம் வரவஞ்சி-மீட்டான்
மலையா மறமன்னன் மால்வரையே போலுங்
கொலையானை பாய்மா கொடுத்து” [பு. வெ. வஞ். 17]
எனவரும்.
18. மட்டூர்தெரியல் மறங்கெழுவேந்தன் கட்டூர்வகைமை
கட்டுரைத்த பக்கத்திற்குச்
செய்யுள்:-
“அவிழ்மலர்க் கோதைய ராட வொருபா
லிமிழ்முழவ மியாழோ டியம்பக்-கவிழ்மணிய
காய்கடா யானை யொருபாற் களித்ததிரு
மாய்கழலான் கட்டூ ரகத்து” [பு. வெ. வஞ். 18]
எனவரும்.
* தண்ணடை நல்கல்-மருதநிலங்களைத்தருதல்;-புறநா. 285,
287, 297. |