பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]25


     
19. வருவிசைப்புனலைக் கற்சிறைபோல ஒருவன் தாங்கிய
ஒருதனி நிலைக்குச்
செய்யுள்:-

     “வீடுணர்ந் *தோர்க்கும் வியப்பாமா லிந்நின்ற
     வாடன் முதியாள் வயிற்றிடங்-கூடார்
     பெரும்படை வெள்ள நெரிதரவும் பேரர
     விரும்புலி சேர்ந்த விடம்”
                  [பு. வெ. வஞ். 19]

எனவரும்.

   
 20. அழியுநர்புறக்கொடை அயில்வா ளோச்சாக் கழிதறுகண்மைத்
தழிஞ்சிக்குச்
செய்யுள்:-

    
“கான்படு தீயிற் கலவார்தன் மேல்வரினுந்
     தான்படை தீண்டாத் தறுகண்ணன்-வான்படர்தல்
     கண்ணியபின் னன்றிக் கறுத்தார் மறந்தொலைத
     லெண்ணியபின் 1 போக்குமோ வெஃகு”
      [பு. வெ. வஞ். 20]

எனவரும். தழிஞ்சி - தழுவல்.

    
21. மதிக்குடைவேந்தன் மாற்றலர் வணங்கவும்
பதிப்பெயர்கில்லாப் பாசறைவஞ்சிக்குச்
செய்யுள்:-

     “கரும்பொடு காய்நெற் கனையெரி யூட்டிப்
     பெரும்புனல் வாய்திறந்த பின்னுஞ்-சுரும்பின்
     றொகைமலிந்த தண்குவளைத் தூமலர்த் தாரான்
     பகைமெலியப் பாசறையு ளான்”
              [பு. வெ. வஞ். 21]

எனவரும்.

    
22. முன்னடையாதார் வளங்கெழு நாட்டைப் பின்னும்
எரியூட்டிய பெருவஞ்சிக்குச்
செய்யுள்:-

     “பீடுலா மன்னர் நடுங்கப் பெரும்புகை
     யூடுலாய் வானத் தொளிமறைப்ப-நாடெலாம்
     பின்னும் பிறங்கழல் வேய்ந்தன பெய்கழற்கான்
     மன்னன் கனல மறம்”
                      [பு. வெ. வஞ். 22]