பக்கம் எண் :

26 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


     23. இறையவன் வயவர்க்கு இருஞ்சோற்றமலை
பெறுமுறையருளிய பெருஞ்சோற்று நிலைக்குச்
செய்யுள்:-

     “இயவர் புகழ வெறிமுர சார்ப்பக்
     குயவரி வேங்கை யனைய-வயவர்
     பெறுமுறையாற் பிண்டங்கோ ளேவினான் பேணா
     ரிறுமுறையா லெண்ணி யிறை”
               [பு. வெ. வஞ். 23]

எனவரும்.
 

     24. வெளிகெடப் பகைமுனை இறுத்தவேந்தன் அளிவிறன் மிகுத்த நல்லிசை வஞ்சிக்குச் செய்யுள்:- 1

     “மடங்கலிற் சீறி மலைத்தெழுந்தார் மண்மே
     லிடங்கெடச் சென்றிறுத்த பின்னு-நுடங்கெரிபோல்
     வெல்லப் பெருகும் படையாற்கு வேந்தர்மேற்
     செல்லப் பெருகுஞ் சினம்”
                  [பு. வெ. வஞ். 24]

எனவரும்.

   
 25. இறுத்தபின் நாடழிபு இரங்கி மறுத்துரைத்த பக்கத்திற்குச்
செய்யுள்:-



    
“குரையழன் மண்டிய கோடுயர் மாடஞ்
     சுரையொடு பீரஞ் சுமந்த நிரைதிண்டேர்ப்
     பல்லிசை வென்றிப் படைக்கடலான் சென்றிறுப்ப
     நல்லிசை கொண்டடையார் நாடு”
            [பு. வெ. வஞ். 25]

எனவரும்.                                                   (8)

                   
 3. உழிஞைத்திணை

       607. உழிஞை தானே மருதத்துப் புறனே
           முழுமுத லரண முற்றலுங் காத்தலு
           மெனவிரு வகைய ததுவென மொழிப.


     இஃது உழிஞைத்திணை மருதத்திணைக்குப் புறனென்பதூஉம்
அதன்பொருட்டிறனுங் கூறுகின்றது.

* புறநா. 292
1 ” 23.
2 ” தொல். புறத். 8 (இ.)