வெட்சித் திணையின் றுறைகள்
603. மண்டமர்க் கிவர்ந்தோன் மருவலர் நிரையினைத்
தண்டத் தலைவரைத் தருகெனப் பணித்தல்
பணிதலைக் கோடல் படையியங் கரவந்
தணியல ரெழுந்தோர் சமரவாய்ப் பறீஇயர்
விரிச்சி யோர்த்தல் வேண்டா வீரம்
வரிச்சிலை மறவர் வழியிடைச் சேற
லொற்றி னாகிய வேயே வேய்ப்புற
முற்றி னாகிய புறத்திறை முற்றிய
வூர்கொலை யாகோள் பூசன் மாற்றே
நோயின் றுய்த்த னுவல்வழித் தோற்றந்
தந்துநிறை பாதீ டுண்டாட் டுறுகொடை
புலனறி சிறப்பொடு பிள்ளை வழக்கே
பெருந்துடி நிலையோ டருந்திறற் கலையூர்
கொற்றவை நிலையொடு வெறியாட் டுளப்படத்
தெருண்டுமுன் வகுத்த கவர்ந்தனர் கோட
லிரண்டுதலை யிட்ட வைந்நான்கு துறைத்தே.
இது மேற்கூறிய
வெட்சிப்பகுதி இரண்டனுள் முன்னையது இத்
துணைத்துறையுடைத் தென்கின்றது.
(இ - ள்.) மண்டமர்க்கிவர்ந்தோன் மருவலர் நிரையினைத் தண்டத்
தலைவரைத் தருகெனப்பணித்தல்
முதல், ஈறாகக் கிடந்த வெறியாட்டுங்
கூடத் தொகுத்து எண்ணுதலால் ஆராய்ந்து மேல்வகுக்கப்பட்ட
கவர்ந்தனர்கோடல் இருபத்திரண்டு துறையினை யுடைத்தாம், எ - று.
அகத்திணைக்கட் துறையுட்பகுதிகளெல்லாம் விரித்துரைத்தாங்கு
உரையாது புறத்திணைக்கட் டுறையுட்பகுதிகளெல்லாம்
அத்துறைக்கட்
டுறுத்துக் கூறுதலிற் றுறையாயிற்று. துறுத்தலாவது ஒன்றன்
காரணமாயினவற்றையெல்லாம்
அவற்றின் காரியமாகிய அதன்கட் செறித்தல்.
அஃதாவது படைத்தலைவரைத் தருக என்றலும்,
படையைக்கூய் வருக
என்றலும், அவர்வருதலும் முதலிய காரணங்களை அவற்றின் காரியமாகிய
நிரையினைத்
தண்டத்தலைவரைத் தருகெனப் பணித்தற்கண் அடக்குதல்.
பிறவும் அன்ன. |