|
19. வாழ்மனைபுகீஇ வைகறைமுழக்கிய கேழ்கிளர்கிணைவன்
கிளந்தகிணை நிலைக்குச் செய்யுள்:-
“வெள்ளி முளைத்த விடியல் வயலாமை
யள்ளகட் டன்ன வரிக்கிணை-வள்ளியோன்
முன்கடை தட்டிப் பகடுவாழ் கென்னாமு
னென்கடை நீங்கிற் றிடர்” [பு. வெ. பா. 18]
எனவரும். அரி - அழகு.
20. செங்களத்தீட்டிய செல்வம் வெண்டுறையாழ் மங்கலப்பாணர்
மறுத்த களவழிக்குச் செய்யுள்:-
“ஈண்டி யெருவை யிறகுளரும் வெங்களத்து
வேண்டியாங் கொண்ட விறல்வேழம்-வேண்டாள்
வளைகள் வயிரியம்பும் வாட்டானை வேந்தே
விளைகட் பகர்வாள் விலை” [பு. வெ. பா. 19]
எனவரும்.
21. கூற்றிருந்தாலுங் கொலைவேல் மன்னவன் வீற்றினிதிருந்த
பெருமங்கலத் திற்குச் செய்யுள்:-
“அழலவிர் பைங்க ணரிமா னமளி
நிழலவிர்பூண் மன்னர்நின் றேத்தக்-கழல்புனைந்து
வீமலிதார் மன்னவனாய் வீற்றிருந்தான் வீங்கொலிநீர்ப்
பூமலி நாவற் பொழிற்கு” [பு. வெ. பா. 20]
எனவரும்.
22. நெடுமதிலெறிந்த நிரைதார் மன்னன் குடுமிகளைந்த புகழ்சாற்று
நிலைக்குச் செய்யுள்:-
“பூந்தா மரையிற் பொடித்துப் புகல்விசும்பின்
வேந்தனை வென்றான் விறன்முருக-னேந்து
நெடுமதில் கொண்டு நிலமிசையோ ரேத்தக்
குடுமி களைந்தானெங் கோ”
[பு. வெ. பா. 21]
எனவரும். குடுமிகளை தல் - மயிர்ச்சிகையைக் கூட்டிமுடித்தல்.
23. இகலடு தடந்தோள் எறிவேலிறைவன் மகளிரொடு மணந்த
மணமங்கலத்திற்குச் செய்யுள்:-
“அணக்கருந் தானையா னல்லியந்தார் தோய்ந்தோண்
மணக்கோல மங்கலம்யாம் பாட - வணக்கருஞ்சீ |