வேந்தன் மாய்ந்தென வியலிடம் புலம்பிய
வாய்ந்த வத்துறைப் பகுதியு மீமத்து
நல்லோள் கணவனொடு நளியழற் புகீஇச்
சொல்லிடை யிட்ட மாலை நிலையுங்
கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச்
செல்வோர் செப்பிய மூதா னந்தமுங்
கொடியான் கூர்ங்கணை குளிப்பத் தன்றொழின்
முடியா னவிந்த வத்துறைப் பகுதியு
மாடமைத் தோளி விரிச்சியுஞ் சோகியும்
வேறுபட வஞ்சி விதும்பா னந்தமுந்
தவப்பெ ரியதோர் வெஞ்சமங் குறுகு
மவற்கி ரங்கிய வத்துறைப் பகுதியுந்
தலைவன்விண் புகவுயிர் தாங்கின னென்றணங்
கலமர லெய்திய வானந்தப் பையுளுங்
கொடித்தேர் மன்னவன் மாய்ந்தெனக் குறைவுற்
றடுத்தோர் புலம்பிய கையறு நிலையொடு
கழிந்தோன் றன்புகழ் காதலித் துரைத்த
மொழிந்த மற்றதன் பகுதியு மதாஅன்
றேதமி லறமுத லியல்பிவை யென்னு
மூதுரை பொருந்திய முதுமொழிக் காஞ்சியு
மாற்றருங் கூற்றம் வருமுனந் தீதொரீஇப்
போற்றுமி னன்றெனப் புகல்பெருங் காஞ்சியு
மேதகு முனிவர் விளம்பிய நெறிமுறை
போதக வென்ற பொருண்மொழிக் காஞ்சியு
நிலமிசை யுலகி னெறிமை கூறிய
புலவ ரெய்தும் புத்தே ணாடுந்
தலைவரும் பொருளைத் தக்காங் குணர்த்தி
நிலையாமை யுரைத்த நீண்முது காஞ்சியு
மலர்தலை யுலகத்து மரபுநன் கறியப்
பலர்செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு
துவர்வாய்ப் பேதையைத் தோய்ந்து காதலன்
கவலையி லேமெனக் கழறிய முல்லையு
மேரா ரகட்டூ ரெய்திய காதலன்
வாரா முன்கார் வந்தகார் முல்லையும்