பக்கம் எண் :

88 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்

 

வார்கழற் பகைஞரை வணக்கிய மன்னவன்
றேர்வர வுரைத்த தேஎர் முல்லையு
மாண்டகை யகல வணங்கழி யில்வயி
னாண்டுணை யாவுறூஉ நாஅண் முல்லையும்
புல்வளம் பழித்துப் புரவலற் புகழ்ந்துதம்
மில்வள மிகுத்த வில்லாண் முல்லையும்
வயலுழு பகட்டொடு மணாளனை மனையாள்
பயிலுறப் பொரீஇய பகட்டு முல்லையு
மாலை மார்பன் மடந்தையைப் புணர்த்த
பாலை வாழ்த்திய பாஅன் முல்லையு
மாரமு தத்தினு மன்ப னல்கிய
காரட கினிதெனுங் கற்பு முல்லையு
மேவரு கணவன் றணப்பத் தன்னிறைக்
காவல் கூறலுங் கடிநக ரடைந்தவ
ளன்னவன் பெருவள னேத்தலு மாகிய
முன்னதன் பகுதியோ ரிரண்டு மதாஅன்று
கொடுப்போ ரேத்திக் கொடாஅர்ப் பழித்தலும்
விடுத்த லறியா விறல்புரி வாகையுள்
வாணிகன் வென்றியு முழவன் வென்றியுங்
கோணெறி பிழையா மல்ல வென்றியு
மிகல்புரி யேறொடு கோழியு மெதிர்வன்
றகருடன் யானை தணப்பில்வெண் பூழொடு
சிவல்கிளி பூவை செழும்பரி தேரோ
டிவர்தருஞ் சூதியாழ் பாட லாடல்
பிடியென நின்ற பெரும்பெயர் வென்றியோ
டடைவுறக் கிடந்த வறுபதிற் றிரண்டு
மின்னன பிறவு மெழுவகைத் திணையுட்
டுன்னிய வொழிபெனத் தூக்கினர் கொளலே.

     இது முற்கூறிய ஒழிபு இத்துணைத் துறையுடைத்தென்கின்றது.

     (இ - ள்.) வேந்திடைதெரிதல் வேண்டியேந்து
போந்தைவேம்பே ஆரெனவரூஉம் மாபெருந்தானையர் பூமுதல் ஈறாகிய
பிடியென நின்ற பெரும்பெயர்வென்றி பொருத்தமுறக் கிடந்த அறுபத்திரண்டு
துறையும் இவைபோலும்.