பிறவும் வெட்சிமுதலாக மேற்கூறிய எழுவகைத்திணையுள்ளுஞ் செறிந்த
ஒழிபென்று ஆராய்ந்துகொள்க,
எ - று.
1. வேந்திடை தெரிதல்வேண்டி ஏந்துபுகழ்ப் போந்தைவேம்பே
ஆரெனவரூஉம் மாபெருந்தானையர்
மலைந்தபூ மூன்றனுட்
போந்தைக்குச்
செய்யுள்:-
“குடையலர் காந்தட்டன் கொல்லிச் சுனைவாய்த்
தொடையவிழ் தண்குவளை சூடான்-புடைதிகழுந்
தேரதிரப் பொங்குந் திருந்துவேல் வானவன்
போரெதிரிற் போந்தையாம் பூ” [பு. வெ. பொது. 1]
எனவரும்.
வேம்புக்குச் செய்யுள்:-
“தொடியணிதோ ளாடவர் தும்பை புனையக்
கொடியணிதேர்க் கூட்டணங்கும் போழ்தின்-முடியணியுங்
காத்தல்சால் செங்கோற் கடுமா னெடுவழுதி
யேத்தல்சால் வேம்பி னிணர்” [பு. வெ. பொது. 2]
எனவரும்.
ஆர்க்குச்
செய்யுள்:-
“கொல்களி றூர்வர் கொலைமலி வாண்மறவர்
வெல்கழல் வீக்குவர் வேலிளையர்-மல்குங்
கலங்க லொலிபுனற் காவிரி நாட
னலங்க லமரழுவத் தார்” [பு. வெ. பொது. 3]
எனவரும்.
2. துன்னருஞ் சிறப்பிற் தொடுகழன்மன்னனை உன்னஞ் சேர்த்திய
உன்னநிலைக்குச்
செய்யுள்:-
“துன்னருந் தானைத் தொடுகழலான் றுப்பெதிர்ந்து
முன்னர் வணங்கார் முரண்முருங்க-மன்னரு
மீடெலாந் தாங்கி யிகலவிந்தார் நீயுநின்
கோடெலா முன்னங் குழை” [பு. வெ. பொது. 4]
எனவரும்.
3. ஏழகமூரினும் இன்னனென்றவன் தாழ்விலூக்கத்து ஏழக
செய்யுள்:-
மனை யாமகிழ வேழக மேற்கொளினுந்
மதி றாழ்வீழ்த் திருக்குமே-தெம்முனையுண் |