பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]9


8. வேய்ப்புறம் முற்றினாகிய புறத்திறைக்குச் செய்யுள்:-

   “உய்ந்தொழிவா ரீங்கில்லை யூழிக்கட் டீயேபோன்
    முந்தமரு ளேற்றார் முரண்முருங்கத்-தந்தமரி
    னொற்றினா ரொற்றி யுரவோர் குறும்பினைச்
    சுற்றினார் போகாமற் சூழ்ந்து” [பு. வெ. வெட்சி. 7]

எனவரும். வேய்ப்புறமுற்றினாகிய புறத்திறை - வேய்க்கப்பட்ட இடத்தின்
புறத்தினைச் சூழ்தலானாகிய புறத்திறை.

9. முற்றிய ஊர்கொலைக்குச் செய்யுள்:-

    
“இகலே துணையா வெரிதவழச் சீறிப்
     புகலே யரிதென்னார் புக்குப் - பகலே
     தொலைவிலார் வீழத் தொடுகழ லார்ப்பக்
     கொலைவிலார் கொண்டார் குறும்பு” [பு. வெ. வெட்சி. 8]
எனவரும்.

 

10. ஆகோடற்குச் செய்யுள்:-

   “கொடுவரி கூடிக் குழூஉக்கொண் டனைத்தா
    னெடுவரை நீள்வேய் நரலு-நடுவூர்க்
    கணநிரை கைக்கொண்டு கையகலார் நின்ற
    நிணநிரை வேலார் நிலை” [பு. வெ. வெட்சி. 9]

எனவரும்.

11. பூசன்மாற்றிற்குச் செய்யுள்:-

   “சூழ்ந்த நிரைபெயரச் சுற்றித் தலைக்கொண்டார்
    வீழ்ந்தனர் வீழ்ந்தார் விடக்குணியத்-தாழ்ந்த
    குலவுக் கொடுஞ்சிலைக்கைக் கூற்றனையா ரெய்த
    புலவுக் கணைவழியே புள்” [பு. வெ. வெட்சி. 10]
 

எனவரும்.

12. நோயின்றுய்த்தற்குச் செய்யுள்:-

   “புன்மேய்ந் தசைஇப் புணர்ந்துடன் செல்கென்னும்
    வின்மே லசைஇயகை வெல்கழலான்-றன்மேற்
    கடுவரை நீரிற் கடுத்துவரக் கண்டு
    நெடுவரை நீழ னிரை” [பு. வெ. வெட்சி. 11]
 

எனவரும்.