பக்கம் எண் :

90 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


     மானொடு தோன்றி மறலுங்கா லேழகத்
     தானொடு நேரா மரசு”
                       [பு. வெ. பொது. 5]

எனவரும்.

    
4. ஏந்துபுகழிறைமகன் இளமை நோக்கான் வேந்தியல்பூண்ட
மற்றதன் பகுதிக்குச்
செய்யுள்:-

    
“வேண்டார் பெரியார் விறல்வேலோன் றானிளையன்
     பூண்டான் பொழில்காவ லென்றுரையா-மீண்டு
     மருளன்மின் கோள்கருது மால்வரை யாளிக்
     குருளையுங் கொல்களிற்றின் கோடு”         
[பு. வெ. பொது. 6]

எனவரும்.

    
5. துளக்கமில் வயவன் தொடுகழல்புனைதற்குச் செய்யுள்:-

    
“வாளமரின் முன்விலக்கி வான்படர்வார் யார்கொலோ
     கேளலார் நீக்கிய கிண்கிணிக்காற்-காளை
     கலங்கழல் வாயிற் கடுத்தீற்றி யற்றாற்
     பொலங்கழல் கான்மேற் புனைவு”
              [பு. வெ. பொது. 7]

எனவரும்.

    
6. களத்திடை வீழ்ந்தோர்க்குக் கற்கண்டிடுதற்குச் செய்யுள்:-

    
“மிகையணங்கு மெய்ந்நிறீஇ மீளி மறவர்
     புகையணங்கப் பூமாரி சிந்திப்-பகையணங்கும்
     வீளைக் கடுங்கணையான் வேறாகி விண்படர்ந்த
     காளைக்குக் கண்டமைத்தார் கல்”
             [பு. வெ. பொது. 8]

எனவரும்.

    
7. கற்கோணிலைக்குச் செய்யுள்:-

    
“பூவொடு நீர்தூவிப் பொங்க விரைபுகைத்து
     நாவுடை நன்மணி நன்கியம்ப-மேவா
     ரழன்மறங் காற்றி யவிந்தாற்கென் றேத்திக்
     கழன்மறவர் கைக்கொண்டார் கல்”
            [பு. வெ. பொது. 9]

எனவரும்.

    
8. கன்னீர்ப்படுத்தற்குச் செய்யுள்:-

    
“காடு கனலக் கனலோன் சினஞ்சொரியக்
     கூடிய வெம்மை குளிர்கொள்ளப்-பாடி
     நயத்தக மண்ணி நறுவிரைகொண் டாட்டிக்

    கயத்தகத் துய்த்திட்டார் கல்”
                [பு. வெ. பொது. 10]

எனவரும்.