9. மற்றவைநிரைத்த அத்துறைப் பகுதிக்குச்
செய்யுள்:-
“கணனார்ந் துவப்பக் கடுங்கண் மறவர்
பிணனார்ந்து பேய்வழங்கு ஞாட்பி-னிணனார்
விழுக்கினால் வேய்ந்த விறல்வேலோர் கல்லை
யொழுக்கினா ரொன்றொருவர் முன்” [பு. வெ. பொது. 11.]
எனவரும்.
10. கல் நாட்டுதற்குச்
செய்யுள்:-
“மாலை துயல மணியெறிந்து மட்டுகுத்துப்
பீலி யணிந்து பெயர்பொறித்து-வேலவரு
ளாண்டக நின்ற வமர்வெய்யோற் காகென்று
காண்டக நாட்டினார் கல்” [பு. வெ. பொது. 12]
எனவரும்.
11. கன்முறைபழிச்சற்குச் செய்யுள்:-
“அடும்புகழ் பாடி யழுதழுது நோனா
திடும்பையுள் வைகிற் றிருந்த-கடும்பொடு
கைவண் குரிசிற்கற் கைதொழூஉச் செல்பாண
தெய்வமாய் நின்றான் றிசைக்கு” [பு. வெ. பொது. 13]
எனவரும். கடும்பு - குடும்பம்.
12. பொன்னார் இற்கொடுபுகுதற்குச் செய்யுள்:-
“வாட்புகா வூட்டி வடிமணி நின்றியம்பக்
கோட்புலி யன்ன குரிசிற்க-லாட்கடிந்து
விற்கொண்ட வென்றி விறன்மறவ ரெல்லோரு
மிற்கொண்டு புக்கா ரியைந்து” [பு. வெ. பொது. 14]
எனவரும்.
13. நனிமிகுசுரத்திடைக் கணவனையிழந்து தனிமகள் புலம்பிய
முதுபாலைக்குச்
செய்யுள்:- 2
“நீர்மலி கண்ணொடு நின்றே னிலையிரங்காய்
தார்மலி மார்பன் றகையகலஞ்-சூர்மகளே
(பா - ம்.) * வாட்பட்டி.
வெ. மாலை யாசிரியர் இது முதல் சிறப்பிற் பொதுவியல் என்று
கூறுவர்.
புறநா. 253 - 256. |