பக்கம் எண் :

92 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்

 

     வெள்ளில் விளைவுதிரும் வேயோங்கும் வெஞ்சுரத்துக்
     கொள்ளனீ கோடல் கொடிது”            
[பு. வெ. சி. பொது. 1]

எனவரும்.

    
14. வாகைவேலவன் வழங்கருஞ்சுரத்திடைத் தோகையை யிழந்து
துளங்குசுரநடைக்குச்
செய்யுள்:-

    
“உரவெரி வேய்ந்த வுருப்பவிர் கானுள்
     வரவெதிரின் வைவேல்வாய் வீழ்வாய்-கரவினாற்
     பேதையைப் பெண்ணியலைப் பெய்வளையை யென்மார்பிற்
     கோதையைக் கொண்டொளித்த கூற்று”
      [பு. வெ. சி. பொது. 2]

எனவரும்.

    
15. மனைவியை யிழந்து மனைவயினிருந்தோன் தனிநிலை யுரைத்த
தபுதாரநிலைக்குச்
செய்யுள்:-

    
“பைந்தொடி மேலுலக மெய்தப் படருழந்த
     மைந்தன் குரிசில் மழைவள்ள-லெந்தை
     தபுதாரந் தாழ்ந்த தனிநிலைமை கேளாச்
     செவிடா யொழிகென் செவி”
               [பு. வெ. சி. பொது. 3]

  எனவரும்.

    
16. இவர்பூண்மொய்ம்பன் இறந்தபின் மனையோள்
தவமேற்கொண்ட தாபதநிலைக்குச்
செய்யுள்:- *

     “கலந்தவனைக் கூற்றங் கரப்பக் கழியா
     தலைந்தினையு மவ்வளைத் தோளி-யுலந்தவன்
     றாரொடு பொங்கி நிலனசைஇத் தான்மிசையுங்
     காரடகின் மேல்வைத்தாள் கை”
            [பு. வெ. சி. பொது. 4]

எனவரும்.

    
17. ஆய்பெருஞ்சிறப்பிற் சிறுவற்பயந்த தாய்தபவரூஉந்
தலைப்பெயனிலைக்குச்
செய்யுள்:-

    
“இடம்படு ஞாலத் தியல்போ கொடிதே
     தடம்பெருங்கட் பாலக னென்னுங்-கடன்கழித்து
     முள்ளெயிற்றுப் பேதையாள் புக்காள் முரணவியா
     வள்ளெயிற்றுக் கூற்றத்தின் வாய்”
          [பு. வெ. சி. பொது. 5]

எனவரும்.

  
* புறநா. 143, 248 - 250.