பக்கம் எண் :

94 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


     22. கொடியான் கூர்ங்கணை குளிப்பத்தன்றொழில் முடியானவிந்த
அத் துறைப்பகுதிக்குச்
செய்யுள்:-

    
“முந்தத்தான் மாவொடு புக்கு முனையமருட்
     சிந்தத்தான் வந்தார் செருவிலக்கிக்-குந்தத்தாற்
     செல்கணை மாற்றிக் குரிசில் சிறைநின்றான்
     கொல்கணைவாய் வீழ்தல் கொடிது”       
[பு. வெ. சி. பொது. 10]

எனவரும். சிறை - கரை.

    
23. ஆடமைத்தோளி விரிச்சியுஞ்சோகியும் வேறுபட வஞ்சி
விதும்பா னந்தத்திற்குச்
செய்யுள்:-

    
“வேந்தார்ப்ப வெஞ்சமத்து வேலழுவந் தாங்கினான்
     சாந்தா ரகலத்துத் தாழ்வடுப்புண்-டாந்தணியா
     மன்னா சொகின மயங்கின வாய்ப்புளு
     மென்னாங்கொல் பேதை யினி”
            [பு. வெ. சி. பொது. 11]

எனவரும்.

    
24. தவப்பெரியதோர் வெஞ்சமங்குறுகும் அவற்கிரங்கிய
அத்துறைப் பகுதிக்குச்
செய்யுள்:-

    
*இன்னா சொகின மிசையா விரிச்சியு
     மன்னா வலமருமென் னாருயிரு-மென்னாங்கொ
     றொக்கார் மறமன்னர் தோலாத் துடிகறங்கப்
     புக்கான் விடலையும் போர்க்கு”
           [பு. வெ. சி. பொது. 12]

எனவரும்.

    
25. தலைவன்விண்புக உயிர் தாங்கினனென்றணங்கு
அலமரலெய்திய ஆனந்தப்பையுளுக்குச்
செய்யுள்:- 1

    
“புகழொழிய வையகத்துப் பூங்கழற் காளை
     திகழொளிய மாவிசும்பு சேர-விகழ்வார்முன்
     கண்டே கழிகாத லில்லையாற் கைசோர்ந்து
     முண்டே யளித்தென் னுயிர்”
              [பு. வெ. சி. பொது. 13]

எனவரும்.

    
26. கொடித்தேர் மன்னவன் மாய்ந்தெனக்குறைவுற்று அடுத்தோர்
புலம்பிய கையறுநிலைக்குச்
செய்யுள்:- 2

  
(பா - ம்.) * இன்னாத சோகி.
   1 புறநா. 228, 229 முதலிய 5 பாடல்கள்.
   2 ” 65, 112 - 120 முதலிய 41 பாடல்கள்
.