பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [எச்சம்]95


     “தாயன்னான் றார்விலங்கி வீழத் தளர்வொடு
     நீயென்னாய் நின்றாயென் னெஞ்சளியை-யீயென்றார்க்
     கில்லென்ற றேற்றா விகல்வெய்யோன் விண்படரப்
     புல்லென்ற நாப்புலவர் போன்று”
          [பு. வெ. சி. பொது. 14]

எனவரும்.

    
27. கழிந்தோன்றன்புகழ் காதலித்துரைத்த மொழிந்த மற்றதன்
பகுதிக்குச்
செய்யுள்:-

    
“நின்று நிலமிசையோ ரேத்த நெடுவிசும்பிற்
     சென்று கழிந்தான் செருவெய்யோ-னென்று
     மழலுங் கதிர்வே லவன்புகழ் பாடி
     யுழலு முலகத் துயிர்”                  
[பு. வெ. சி. பொது. 15]

எனவரும்.

    
28. *ஏதமிலறமுதல் இயல்பிவையென்னும் மூதுரைபொருந்திய
முதுமொழிக் காஞ்சிக்குச்
செய்யுள்:- 1

    
“ஆற்றி னுணரி னருளறமா மாற்றார்க்குப்
     போற்றார் வழங்கிற் பொருள்பொருளா-மாற்றிப்
     புகலா தொழுகும் புரிவளையார் மென்றோ
     ளகலா தளித்தொழுக லன்பு”            
[பு. வெ. கா. பொது. 1]

எனவரும்.

    
29. மாற்றருங்கூற்றம் வருமுனந்தீதொரீஇப் போற்றுமினன்றெனப்
புகல்பெருங் காஞ்சிக்குச்
செய்யுள்:- 2

    
“ஆயா தறிவயர்ந் தல்லாந் தகலிடத்து
     மாயா நிதிய மனைச்செறீஇ-யீயா
     திறுகப் பொதியன்மி னினறொடு நாளைக்

     குறுக வருமரோ கூற்று”                   [பு. வெ. கா. பொது. 2]

எனவரும்.

    
30. மேதகுமுனிவர் விளம்பிய நெறிமுறை போதகவென்ற
பொருண்மொழிக் காஞ்சிக்குச்
செய்யுள்:-

  
* பு. வெ. மாலை யாசிரியர் இது முதல் காஞ்சிப் பொதுவியல்
   என்பர்.
   1 முதுமொழிக் காஞ்சி 1-100 (பதினெண் கீழ்க்கணக்கு நூல்)
   புறநா. 18, 27-29 74.
   2 ” 194, 357, 359, 360, 362-366.
   ” 5, 24, 75, 121, 182, 183, 185, 193, 195, 214.