“ஆய பெருமை யவிர்சடையோ ராய்ந்துணர்ந்த
பாய நெறிமேற் படர்ந்தொடுங்கித்-தீய
விருளொடு வைகா திடம்படு ஞாலத்
தருளொடு வைகி யகல்” [பு. வெ. கா. பொது. 3]
எனவரும்.
31. நிலமிசையுலகின் நெறிமைகூறிய புலவரெய்தும்
புத்தேணாட்டுக்குச்
செய்யுள்:-
“பொய்யில் புலவர் புரிந்துறையு மேலுலக
மையமொன் றின்றி யறிந்துரைப்பின் வெய்ய
பகலின் றிரவின்று பற்றின்று துற்றின்
றிகலின் றிளிவரவு மின்று” [பு. வெ. கா. பொது. 4]
எனவரும்.
32. தலைவரும்பொருளைத் தக்காங்குணர்த்தி நிலையாமை யுரைத்த
நீள்முதுகாஞ்சிக்குச்
செய்யுள்:-
“இளமை நிலைதளர மூப்போ டிறைஞ்சி
யுளமை யுணரா தொடுங்கி-வளமை
வியப்போவ லில்லா வியலிடத்து வெஃகா
துயப்போக லெண்ணி னுறும்” [பு. வெ. கா. பொது. 5]
எனவரும்.
33. மலர்தலையுலகத்து மரபுநன்கறியப் பலர்செலச்செல்லாக் காடு
வாழ்த்துக்குச்
செய்யுள்:-
*
“முன்புறந் தான்காணு மிவ்வுலகை யிவ்வுலகிற்
றன்புறங் கண்டறிவார் தாமில்லை-யன்பி
னழுதார்கண் ணீர்விடுத்த வாறாடிக் கூகை
கழுதார்ந் திரவழங்குங் காடு”
[பு. வெ. கா. பொது. 6]
எனவரும்.
34. 1 துவர்வாய்ப்பேதையைத் தோய்ந்து காதலன் கவலையிலே
மெனக்கழறிய முல்லைக்குச் செய்யுள்:-
“ஊதை யுளர வொசிந்து மணங்கமழுங்
கோதைபோன் முல்லைக் கொடிமருங்குற்-பேதை
குவைஇ யிணைந்த குவிமுலை யாகங்
கவைஇக் கவலை யிலம்” [பு. வெ. முல். பொது. 1]
எனவரும்.
* புறநா. 356.
1 இதுமுதல் முல்லைப்பொதுவியல் என்பர் பு. வெ. ஆசிரியர். |