பக்கம் எண் :

 14

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 உபமானமாகவும் ஒரே பாடலில் அமைத்துக்காட்டும் இதர விதர உவமை, ஒன்று
 மற்றென்றனை ஒரு காரணத்தான் அன்றிப் பிறிது ஒரு காரணத்தானும் ஒத்திருக்கும்
 என்று  குறிப்பிடும் சமுச்சய உவமை, உபமானத்தை நீக்கி உபமேயத்தையே
 சிறப்பித்துக் குறிப்பிடும்  உண்மை உவமை, கூறப்பட்ட செய்திக்கு ஒப்புமையான
 பிறிது ஒரு செய்தியை ஒரேபாடலில்  அடுத்தடுத்துக் குறிப்பிடும் மறுபொருளுவமை,
 உபமானத்தைப் பெரிதும் புகழ்ந்து உவமிக்கும்  புகழுவமை உவமையைக் குறை ஏறி
 உவமிக்கும் நிந்தை உவமை, ஒன்றனுக்கு ஒன்றனையே  ஒப்பாகக் கூறும் நியம
 உவமை, ஒன்றனுக்கு ஒரு பொருளேயன்றி அது போன்ற ஏனைய  பொருள்களும்
 உவமையாகும் என்று கூறும் அநியம உவமை, உவமையையும் உபமேயத்தையும்
 ஐயப்படும் ஐயஉவமை, ஒரு காரணம் பற்றி உவமை அதுவன்று இதுவே என்று
 அறுதியிடும்  தேற்ற உவமை, உவமை சிறந்தது ஆயினும் உபமேயத்தினும்
 மேம்பட்டதன்று என்று கூறும்  இன்சொல் உவமை, உபமேயத்தை உபமானமாக்கிக்
 கூறும் விபரீத உவமை, ஒருபொருளை  மற்றொரு பொருள் போலும் என்று கூற
 மனம் விரும்பும் விருப்பத்தைக் குறிப்பிடும் வேட்கை  உவமை, ஒரே உபமேயத்திற்கு
 உபமானங்கள் பலவற்றைக் குறிப்படும் பல பொருள் உவமை,  உவமைப்பொருள்களே
 நேகமாக ஒப்புமை கூறாது அவற்றின்கண் சில செய்திகளைக் கூறுபாடு செய்து
 கொண்டு அக்கூறுபாடுகளால் வேறுபடதக் கூறும் விகார உவமை,  ஒரு பாருளிடத்துக்  கொண்ட விருப்பத்தான் ஒப்பிமைப் பொருளிடத்து மயங்கி உரைத்தலைக் கூறும்
 மோக உவமை,  உலகில் இல்லாத பொருளை உவமையாகக் கூறும் அபூத உவமை,
 உபமானங்கள் பலவற்றுள்  ஒவ்வொன்றனோடும் உவமையுருபைப் புணர்த்துக் கூறும்
 பலவயிற்போலி உவமை, உவமைகள்  பலவற்றுள் ஒன்றனுடனேயே உவமையுருபைப்
 புணர்த்துக் கூறும் ஒருவயிற்போலி உவமை, நிகழாத செய்தியை நிகழ்வது போலக்
 கூறி உவமை யாக்கும் கூடா உவமை, உபமானத்தை  அடியோடு மறுத்து
 உபமேயத்தையே தனக்குத் தானே ஒப்பாகக்கூறும் பொது நீங்குவமை,
 ஒருபொருளுக்கு வரும் உவமைகளைப் பொருள் தொடர்புற அமைக்கும் மாலை
 உவமை,  உவமையணி ஏணைய அணிகளோடும் இயைந்து வரும அற்புத உவமை,
 சிலேடை  உவமை, அதிசய உவமை, விரோத உவமை, ஒப்புமைக் கூட்ட உவமை,
 தற்குறிப்பேற்ற உவமை,