பக்கம் எண் :

 அணியியல் - உவமையணி்

151 

     "உவமைச் சொல்லே வரம்புஇகந் தனவே"

 என்ப ஆகலின், எடுத்து ஓதி ஒழியாது "இன்னபிறவும்" என்றார்.               23

ஒத்த நூற்பாக்கள்

     [இவ்வுவமை உருபுகள்பற்றி இலக்கணநூல்கள் குறிப்பிடுவனவற்றை நோக்குவாம்,
 தொல்காப்பியனார் உவமவியலில்,

    "அவைதாம்,
     அன்ன ஏய்ப்ப உறழ ஒப்ப
     என்ன தான என்றவை எனாஅ
     ஒன்ற ஒடுங்க ஒட்ட ஆங்க
     வென்ற வியப்ப என்றவை எனாஅ
     எள்ள விழைய விறப்ப நிகர்ப்பக்
     கள்ளக் கடுப்ப ஆங்கவை எனாஅக்
     காய்ப்ப மதிப்பத் தகைய மருள
     மாற்ற மருள ஆங்கவை எனாஅப்
     புல்லப் பொருவப் பொற்பப் போல
     வெல்ல வீழ ஆங்கவை எனாஅ
     நாட நளிய நடுங்க நந்த
     ஓடப் புரைய என்றவை எனாஅ
     ஆறாறு அவையும் அன்ன பிறவும்
     கூறுங் காலைப் பல்குறிப் பினவே".                    - தொ. பொ. 286 

    "அன்ன ஆங்க மான விறப்ப
     என்ன உறழத் தகைய நோக்கொடு
     கண்ணிய எட்டும் வினைப்பால் உவமம்."                        - 287 

    "அன்னஎன் கிளவி பிறவொடும் சிவணும்"                        - 288 

    "எள்ள விழைய் புல்லப் பொருவக்
     கள்ள மதிப்ப வெல்ல வீழ
     என்றாங்கு எட்டே பயனிலை உவமம்."                          - 289