பக்கம் எண் :

 அணியியல் - உவமையணி்

153 

    "பொதுவினும் சிறப்பினும் புணர்ந்துள வாகி
     இதுவழக்கு இதுசெயுள் எனுமீ ரிடத்தும்
     வெளிப்படை குறிப்பென விழுமிய நெறியால்
     கொளப்படும் உவம உருபினைக் கூறின்
     அன்ன போல அனைய மான
     என்ன நேர விறப்ப நிகர்ப்ப
     நாட நளிய நடுங்க நந்த
     ஓட ஒன்ற ஒடுங்க ஒட்டக்
     கள்ளக் கருதக் காட்டக் கடுப்ப
     எள்ள விழைய எதிர ஏர்ப்ப
     மருள மலைய மாற மதிப்ப
     என்ற வந்த ஏர ஏய
     ஆங்க ஒப்ப அமர இயையப்
     புல்ல உறழப் புரையப் பொருவ
     அனைதுணை கெழுவீழ் தழைசெத்து அற்றுஅணி
     என்றிவை நாற்பான் எட்டும் பிறவும்
     ஒன்றிய திறத்தால் ஒழுகுதல் உளவே",                       - மா. 113 

     பிறவும் என்றதனால் வெல்ல, வென்ற, வியப்பு, ஒத்த, ஒக்கும், தகைய, தகைப்ப,
 பொற்ப, காய்ந்த, நோக்க, மருளும், புரையும், துலை, ஐந்தன் உருபாகிய இன், என -
 முதலிய கொள்க,]

(23) 

உருவகவணி - இலக்கணம்

 643, உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து
      ஒன்றுஎன மாட்டின்அஃது உருவகம் ஆகும்,

 நிறுத்த முறையானே உருவக அலங்காரம் கூறுவனவற்றுள் இஃது அதன்பொது
 இலக்கணம் கூறுகின்றது,

      இ-ள் : உவமானப் பொருளையும் உவமேயப் பொருளையும் வேறுபாடு
 ஒழிவித்து ஒன்று என்பது ஓர் உணர்வு தோன்ற ஒற்றுமை கொளுத்தின், அது மேல்
 கூறிய உருவகம் என்னும் அலங்காரமாம் என்றவாறு,

24