பக்கம் எண் :

 154

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

விளக்கம்

     [உவமை அணியில் உபமானம் உபமேயம் உவமைஉருபு பொதுத்தன்மை
 என்ற நான்கும் இருக்கும். உபமானம் முன்னும் உவமைஉருபும் பொதுத்தன்மையும்
 இடையிலும் உபமேயம் ஈற்றிலும் வரும். உவமைஉருபும் பொதுத்தன்மையும் மறைந்து
 வருதலும் உண்டு்.

     உருவக அணியில் உபமேயம் முன்னும் உபமானம் பின்னும் உருவக உருபு
 இடையிலும் வரும். உருவக உருபு மறைதலும் உண்டு. உருவகத்தில் உபமானம்
 உபமேயம் இரண்டும் வேறுபாடு நீங்கி ஒன்றாகவே கொள்ளப்படும்.

     பவளவாய் என்பது உவமை.

     வாய்ப்பவளம் என்பது உருவகம்.

     "வாய்பவளம் என்ற தொடர் பவளம் போலும் வாய் என்றே பொருள்
 படுதலின் உவமையாம் என்க.

- மாறன். 115 

     இவ்வுருவகம் மிகை ஒற்றுமை உருவகம், குறை ஒற்றுமை உருவகம், அவையில்
 உருவகம், மிகையதன் செய்கை உருவகம், குறையதன் செய்கை உருவகம்,
 அவையிலதன் செய்கை உருவகம் என்று அறுவகையதாகச் சந்திராலோகம் குறிப்பிடும்.

    "உயர்புகழ்நங் கோனாம் உருவுடைய மாரன்
     வடிவழகை நாடும்என் கண்"

 இப்பாடலில் கோன் மாரனாக உருவகம் செய்யப்பட்டுள்ளான். மாரனுக்கு இல்லாத
 உருவம் கோனுக்கு அடையாகக் கூறப்பட்டமையின் இது மிகை ஒற்றுமை உருவகம்.

    "எல்லாரும் ஏத்துபுகழ் ஏந்தலிவன் நெற்றிவிழி
     இல்லாத சங்கரனே யாம்"

 தலைவனைச் சிவபெருமானாக உருவகித்துச் சிவபெருமானுக்கு உரிய நெற்றிவிழயை
 நீக்கியதால் இது குறை ஒற்றுமை உருவகம்,