பக்கம் எண் :

 அணியியல் - முன்னுரை

17 

     ஒரு பொருளைக் குறிப்பினால் விலக்கும் அணி முன்னவிலக்கு அணியம். அஃது
 இறந்தகால விலக்கு, நிகழ்கால விலக்கு, எதிர்கால விலக்கு எனக் காலம் பற்றி
 மூவகைப்படும். பொருள், பண்பு, காரணம், காரியம் என்ற நான்கனுள் ஒன்றனைப்
 பொருந்தி அவ்வணி நிகழும். அம்முன்னவிலக்கின் விரி - வன் சொல், வாழ்த்து,
 தலைமை, இகழ்ச்சி, துணைசெயல், முயற்சி, பரவசம், உபாயம், கையறல், உடன்படல்,
 வெகுளி, விலக்கல், ஐயம் என்ற பதின்மூன்றும் பிறவும் ஆம். அவ்வணி வேற்றுப்
 பொருள் வைப்பு, சிலேடை, ஏது என்ற ஏனை அணிகளோடு கூடி வருதலும் உண்டு.

     ஒரு செய்தியைக் கூறத் தொடங்கி அதனை நன்கு விளக்கிக் கூறுவதற்கு
 உலகறிந்த பிறிது ஒருசெய்தியைக் குறிப்பிடுவது வேற்றுப்பொருள் வைப்பணியாம்.
 அவ்வணி - முழுவதும் சேறல், ஒருபுடைச் சேறல், மாறுபட்டுத் தோன்றுதல்,
 சிலேடையான் வேற்றுப்பொருள் அமைத்தல், உலக இயற்கைக்குப் பொருந்தாத
 இயற்கை, உலகியலுக்குப் பொருந்தும் இயற்கை, உலகியலுக்குப் பொருந்துதலும்
 பொருந்தாமையும் ஆகிய இருமை இயற்கை, உலக இயலுக்கு அடியோடு மாறுபடும்
 விபரீதப் படுதல் என எட்டு வகைப்படும்.

     வெளிப்படையாகவோ குறிப்பாகவோ ஒப்புமையுடைய இரு பொருள்களை
 ஒருபொருளானும் இருபொருளானும் மிகுதி குறைவுகளானும் வேறுபடுத்துக்காட்டு
 வேற்றுமையணி - குணம், பொருள், சாதி, தொழல் என்ற நான்கனையும்
 நிலைக்களனாகக் கொண்டு தோன்றும்.

      ஒருபொருளின் செயலைக் குறிப்பிடுங்கால், அச்செயலுக்குப் பலரும் அறியும்
 காரணத்தை விடுத்து வேறோரு காரணத்தை இயல்பாகவோ குறிப்பாகவோ
 புலப்படுமாறு உரைக்கும் அணி விபாவனை அணி ஆகும்.

     கவி தான் கூறத் கருதிய பொருளை மறைத்து அதனைக் குறிப்பாக
 வெளிப்படுத்துவதற்கு அதற்கு ஒப்புமையான பிறிது ஒருபொருளைக் கூறுவது
 ஒட்டணியாகும். கூறும் பொருளும் அதன் அடைகளும் கருதும் பொருளுக்கும்
 வேறுபடத் தொடுத்தல், அடை கூறும் பொருளுக்கும குறிப்பிடக் கருதும்
 பொருளுக்கும்.

     3-4