பக்கம் எண் :

 22

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

      ஈரடிமடக்கு ஆறு வகைப்படும். அவையாவன - முதலடியும் இரண்டாம்
 அடியும், முதலடியும் மூன்றாம் அடியும், முதலடியும் நான்காம் அடியும், மூன்றாம்
 அடியும் நான்காம் அடியும், இரண்டாம் அடியும் நான்காம் அடியும், இரண்டாம்
 அடியும் மூன்றாம் அடியும் மடக்குதலாம்.

     மூவடி மடக்கு நான்கு வகைப்படும். அவையாவன - நான்காம் அடி ஒழித்து
 ஏனைய மூன்று அடியும், இரண்டாம் அடி ஒழத்து ஏனைய மூன்று அடியும், மூன்றாம்
 அடி ஒழித்து ஏனைய மூன்றடியும், முதலடி ஒழித்து ஏனைய மூன்று அடியும்
 மடக்குதலாம்.

     நான்கடியும் மடக்கி வரும் முற்றுமடக்கு ஒன்றே.

     எனவே அடிமடக்குப் பதினொன்று, ஓரடிமடக்கு நான்கு ஆகிய
 பதினைந்தனையும் ஆதி - இடை - கடை - ஆதியோடு இடை - ஆதியோடு கடை -
 இடையோடு கடை - முற்று என்ற ஏழனோடும் கூட்டி உறழ, மடக்கு நூற்றைந்து
 வகைப்படும் என்பது கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை இடையிடாது வருவன,
 இடையிட்டு வருவன, இடையிட்டும் இடையிடாதும் வருவன என்ற முக்கூற்றான்
 உறழ மடக்கணிவகை முந்நூற்றொருபத்தைந்து என்று கணக்கிடுவாரும் உளர்.

     கோமூத்திரி - கூடசதுக்கம் - மாலைமாற்று - மாத்திரைச் சுருக்கம் - மாத்திரை
 வருத்தனம் - எழுத்து வருத்தனம் - ஒற்றுப் பெயர்த்தல் - வினா உத்தரம் -
 நாகபந்தம் - முரசபந்தம் - திரிபாகி - திரிபங்கி - பிறிதுபடுபாட்டு - கதை கரப்பு -
 கரந்துரைச்செய்யுள் - சக்கரம் - சுழிகுளம் - சருப்பதோபத்திரம் - அக்கரச்சுதகம் -
 நிரோட்டகம் என இருபது வகைத்தாகச் சித்திரகவி கூறப்பட்டுள்ளது.

     பிரிபொருள் சொற்றொடர், மாறுபடு பொருள்மொழி, கூறியது கூறல், கவர்படு
 பொருள்மொழி, நிரல்நிறைவழு, சொல்வழு, யதிவழு, செய்யுள்வழு, சந்திவழு,
 இடமலைவு, காலமலைவு, கலைமலைவு, உலகமலைவு, நியாயமலைவு, ஆகமமலைவு
 என்ற பதினைந்தும் தம்மிடை நிகழாத வகையில் செய்யுட்கள் இயற்றப்படல் வேண்டும்.
 மேற்கோள், ஏது, எடுத்துக்காட்டு என்பன