பக்கம் எண் :

 அணியியல் - முன்னுரை

23 

 பற்றிய பல செய்திகளும் வரம்பில ஆதலின், அவை அளவை நூல்  வல்லார்வாய்க்
 கேட்டு உணரப்படும்.

     செய்யுள் முழுதும் ஒரேபொருள் தொடர்ச்சிபெறக் கூறப்படாமையாகிய
 பிரிபொருள் சொற்றொடர் என்ற வழு கள்ளுண்டு களித்தார் கூற்றினும் பித்தர்கள்
 கூற்றினும் வழுவமைதியாகக் கொள்ளப்படும். முன்னர் மொழிந்ததற்குப் பின்னர்
 முரண்பட்ட செய்திகளைக் கூறும் மாறுபடு பொருள்மொழி என்றவழு காமமும்
 அச்சமும் மீதூர்ந்தவழிக் கூற்று நிகழ்த்துமிடத்து வழுவமைதியாகக் கொள்ளப்படும்,
 மொழிந்த செய்தியையே மீண்டும் குறிப்பிடும் கூறியதுகூறல் என்ற வழு விரைவு
 பற்றியும் சிறப்புப் பற்றியும் கூற்று நிகழ்த்தும் இடத்து வழுவமைதியாகக்
 கொள்ளப்படும். ஒரே சொற்றொடர் இருவேறு மாறுபட்ட கருத்துக்களைப் பயக்கும்
 வகையில் அமைந்திருக்கும் கவர்படு பொருள்மொழி என்றவழு இருவேறு
 கருத்துக்களானும் செய்யுளில் பொருள்வழு ஏற்படாத இடத்து வழுவமைதியாக்
 கொள்ளப்படும். முடிக்கும் சொற்களையும் முடிக்கப்படும் சொற்களையும் வரிசைப்பட
 அமைக்காத நிரல்நிறை வழு, அறிவான், தவறின்றி நிரலே நிறுத்துப் பொருள்
 செய்துகொள்ளும் வகையில் அமைந்திருப்பின் வழுவமைதியாகக் கொள்ளப்படும்.
 சொல்லிலக்கணத்தொடு மாறுபட்டு அமையும் சொல்வழு சான்றோர் வழக்கில் பயின்று
 வருமாயின் வழுவமைதியாகும். ஓசைகொண்டு தளை அறுக்குமிடத்து இடர்ப்பாடு தரும்
 யதிவழு வகையுளியாகப் பிரித்துக்கூறும் இடத்து வழுப்படாதமையின் வழுவமைதியாகக்
 கொள்ளப்படும். யாப்பிலக்கணத்தொடு முரண்பட்டு அமையும் செய்யுள் வழு
 இருடிகளும் இருடிகள் போல்வாரும் செய்யும் அருளிச் செயல்களில் வழுவமைதியாகக்
 கொள்ளப்படும். எழுத்து இலக்கணத்தொடு பொருந்தாது அமையும சந்திவழு
 இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சிக்குச் சிறப்புவிதி உண்மையின் ஏற்புடைத்தாகும்.

     இடம் - மலை - யாறு - நாடு இவற்றுள் ஒன்றற்கு உரிய பொருளைப் பிறிது
 ஒன்றற்குக் கூறுவது இடமலைவு ஆகும்.... பெரும்பொழுது சிறு பொழுது
 என்பனவற்றுள் ஒன்றற்கு உரிய செய்தியைப் பிறிது ஒன்றற்குக் கூறுவது கால
 மலைவாகும். குற்றமறச் சொல்லப்பட்ட அறுபத்துநான்கு கலைகள் பற்றிய செய்திகளில்
 திரிபு தோன்றக் கூறுவது கலை மலைவாகும். சான்றோர் ஒழுக்க