[உலகத்தார் குறிப்பிடும் காரணத்தை விடுத்துக் கவிதன் கற்பனையால் 
 விசேடமாக எண்ணிச் சொல்வது விபாவனையாம். குறிப்பினால் ஆராய்ந்து 
 காரணத்தை உணருமாறு அமைப்பது சிறப்புடைத்து. இஃது பிறிதாராய்ச்சியணி 
 எனவும் கூறப்பெறும்.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும் தண்டி -
51
    "பாவும் விபாவனை பல்லோர் அறியும் பரிசொழித்து
	
     மேவும் இயல்பு குறிப்பேது நீங்கி விளைவுரையாம்."            - வீ. 166 
    "மேதக உலகம் விளம்பிய காரணத்து
	
     ஆதலை விலக்குபு அயல்ஒரு நெறித்தாம்
     ஏதுவில் தன்மையில் குறிப்பின்எய் தியமரபு
	
     ஓதுதல் விபாவனை எனஉரைத் தனரே."                     - மா. 209 
    "வினைஎதிர் மறுத்துப் பொருள்புலப் படுத்தலும்	
     நினைவுறு பொதுவகை யானிபம் விலக்கிக்
     காரியம் புலப்படுத் தலும்எனக் கழறின்
	
     ஓரிரண் டாகும் உயர்குறிப் பினவே."                        - மா. 210 
    "விபாவனை என்ப விளங்கிய உலக	
     சுபாவனை அலத்திறம் தோற்றி இயல்பலே."             - தொ. வி. 358 
    "ஒன்றன் வினையறிந் துரைக்கும் காலை
	
     உலகறி காரணம் ஒழித்துப் பிறிதொரு
	
     காரணம் இயல்பினும் குறிப்பினும் புலப்படல்
	
     விபாவனை என்மனார் மெய்யுணர்ந்த தோரே."        - மு. வீ. பொ. 76 
    "உலகறி காரணம் ஒன்று மின்றிக்
     காரியம் பிறத்தலும் காரணஇயல் தொடர்பு
	
     இரண்டிலொன் றெஞ்சி இருப்பக் காரியம்
 
     பிறத்தலும் காரியம் பிறத்தற் காந்தடை	
     உள்ள தாக அதுதான் உதித்தலும்
     காரணம் அல்லா மற்றொரு கருத்தால்