"ஒத்தது ஒன்று உரைப்பின்" எனப் பொதுப்படக் கூறிய அதனால், இஃது
அகத்திணைபற்றி வருங்கால் புள் முதலிய கருப்பொருள் நிலனாகப் புலப்படுத்தலும்,
புறத்திணைப்பற்றி வருங்கால் யாதானும் ஒத்தது ஒன்று நிலனாகப் புலப்படுத்தலும்
கொள்க.
ஒட்டு எனினும், உள்ளுறை உவமம் எனினும், உவமப்போலி எனினும், பிறிது
மொழிதல் எனினும், நுவலா நுவற்சி எனினும் ஒக்கும்.
[ஒட்டும் ஒள்ளுறைஉவமும் ஒன்றே என்பது தண்டியாருக்கும், வீரசோழிய
நூலாருக்கும் இவருக்கும் கருத்தாகும். மாறன் அலங்காரநூலார் ஒட்டு வேறு,
உள்ளுறை உவமம் வேறு என்று குறிப்பிட்டு இரண்டனையும் தனித்தனி அணி
ஆக்குவர். ஒட்டணிக்கு இவர் கூறும் வகைகளை விடுத்துப் பொருள்ன, இடம், சாதி,
வினை, குணம், பொழுது என்பனவற்றை அடிப்டையாகக் கொண்டு், கருப்பொருளில்
பிறத்தல் வேண்டும் என்னும் யாப்புறவு இன்றிப் புறத்தினும் புறப்புறத்தினும் சென்று,
செய்யுள் செய்யும் புலவன் முதலாயினோர் "கூற்றாய்ச் சுட்டு என்றும்
உள்ளுறையாய், தொல்காப்பியம் குறிப்பிடும்