பக்கம் எண் :

அணியியல் நூற்பாச் செய்திகள்

தொடர்
நூற்பா
எண்

 

இயல் நூற்பா எண்

620
 
அணியாவது குணம் அலங்காரம் என இருதிறப் பட்டுப் பொருளைப்
புலப்படுத்தப் பயன்படும் என்பது.
1
621
 
பொருட்கு இடம் செய்யுளாதலின், அச்செய்யுளை விளக்கி நிற்பதும்
அவ்வணியினது இயல்பு என்பது
2
622
செய்யுள் முத்தகம் முதலாக நான்கு வகைப்படும் என்பது.
3
623
முத்தகச் செய்யுள் தனிநின்று முடியும் என்பது.
4
624
 
குளகச்செய்யுள் பலபாட்டுகளுக்கு ஒரே முடிக்குஞ் சொல்லைக் கொண்டு
முடியும் என்பது.
5
625

 
தொகைநிலைச் செய்யுள் புலவன் ஒருவனாலோ புலவர் பலராலோ
இயற்றப்பட்டுப் பொருள் இடம் காலம் தொழில் பாட்டு அளவு இவற்றின்
அடிப்படையில் தொகுக்கப்படும் என்பது.
6
626
 
தொடர்நிலைச் செய்யுள் பொருள் தொடர்நிலை, சொல் தொடர்நிலை என
இரு வகைப்படும் என்பது.
7
627
 
பொருள் தொடர்நிலை - பெருங்காப்பியம், காப்பியம் என இரு வகைப்படும்
என்பது.
8
628
பெருங்காப்பியத்து இலக்கணம் இஃது என்பது.
9
629
கூறிய உறுப்புக்களுள் சில குறைந்தும் பெருங்காப்பியம் அமையலாம்
என்பது.
10
630
 
அறம் முதலிய நான்கனுள் குறைபாடுடையது காப்பியம் என்றும் சிறுகாப்பியம்
என்றும் கூறப்படும் என்பது.
11