என வரும். பிறவும் அன்ன. (36)
[சந்திரனுடைய வெள்ளிய நிலாக்கதிர் வெள்ளிக்கிண்ணத்தில் பாய்ந்தனவாக,
அக்கதிர்களின் ஒளியைப் பால் என்று திரிபாகக் கருதி அதனைப் பருகுதற்குப்
பசிய கிளி கிண்ணத்தைச் சுவைக்கச் செல்லும். பக்கலில் தலைவருடைய கழுவுதலை
நீக்கிக்கொண்ட மகளிர் சந்திரனுடைய வெள்ளியகிரணங்களைத் தம்
வெண்டுகில்களாகக் கருதி, அத்துகில்களைப் பற்றுவதற்காகக் கைகளை நீட்டுவார்கள்
என்ற இப்பாடலில், நிலாக்கதிர் பாலாகவும் வெண்துகிலாகவும் திரியக்கொள்ளும்
அளவிற்கு உயர்வு நவிற்சி சொல்லப்பட்டவை திரிவு அதிசயமாகும்.
இவ்வதிசயஅணி -- இடம், சினை, காலம் முதலியவற்றோடும் வரும் என்பதை
மாறன் அலங்காலம் எடுத்துக்காட்டுப் பாடல்களோடு சுட்டுகிறது.- மா. 145] 36