பக்கம் எண் :

 அணியியல் - தற்குறிப்பேற்றவணி

251 

     இது நிறுத்தமுறையானே தற்குறிப்பேற்றம் என்னும் அலங்காரம் ஆமாறும் அதன்
 ஒழிபும் கூறுகின்றது.

     இ-ள் : இயங்குதிணையும் நிலைத்திணையும் ஆகிய இருகூற்றுப்
 பொருளின்கண்ணும், இயல்பினான் நிகழும் தன்மை ஒழியக் கவி தன்னான் பிறிது
 ஒன்றைக் கருதி, அவற்றுக்கண் ஏற்றிச் சொல்லுவது தற்குறிப்பேற்ற அலங்காரமாம்.
 அவ்வலங்காரம் அன்ன போல் என்பன முதலிய உவமச்சொல் புணர்த்து விளங்கும்
 தோற்றமும் உடைத்து என்றவாறு.

     [இதனைத் தொன்னூல் விளக்கம் ஊகாஞ்சிதம் என்று குறிப்பிடும். வீரசோழியம்
 நோக்கு என்னும்.

ஒத்த நூற்பாக்கள்

    "பெருகிய நோக்கது தற்குறிப்பேற்றம் பெயர்பொருளாய்
     வருவதும் பேராப் பொருளதுமாக வகுத்தனரே."                - வீ. 167 

    "உலகினுள் ஒருபொருட்கு உற்றதன் மைத்திறம்
     விலக்குபு பிறிதின் விளைந்ததென்று, உட்கொண்டு
     ஏற்றுதல் ஆகும் தற்குறிப் பேற்றம்."                         - மா. 140 

    "அதுவே, சராசரம் எனும்இரண் டினும்சார் தருமே."                 - 141 

    "உவமச் சொல்புணர்ந்து ஒழுகலும் உளதே,"                       - 142 

    "ஊகாஞ்சிதம் என்ப உரிமை ஒழித்துமற்று
     ஆகுமோர் குறிப்பொருள் அறைந்து பொருத்தலே."       - தொ, வி. 346 

    "அசரம் சரமிரண் டாகிய பொருளினும்
     அறிவியல் பால்வினை திறனலா தாங்குக்
     கவிதான் ஒருபொருள் கருதிமற் றவற்றில்
     சார்த்தி உரைப்பது தற்குறிப் பேற்றம்."                - மு. வீ. பொ, 83