| 
				
					| 
						| 
 இப்பாடலில், மதியம் தேய்தல் இயற்கையாகவும், கவி அத்தேய்தலுக்கு ஒரு கற்பனைசெய்து காரணம் காட்டுதற்கண் தற்குறிப்பேற்ற அணி இயங்குதிணையிடத்தே
 வந்தவாறு.]
 
     நிலைத்திணைத் தற்குறிப்பேற்றம் வருமாறு : 
    "வேனில் வெயிற்குஉலந்த மெய்வறுமை கணடுஇரங்கி,வானின் வளம்சுரந்த வண்புயற்கு, -- தான்உடைய
 தாதும் மேதக்க மதுவும் தடஞ்சினையால்
 போதும் மீதுஏந்தும் பொழில்"
 
 என வரும். பிறவும் அன்ன.      [முதுவேனிற் காலத்தில் கதிரவன் வெப்பம் தாளாமல் உலர்ந்த தன் மேனிவாட்டத்தை அறிந்து அதனைப் போக்குதற்கு மழை பொழிந்த கார்மேகத்திற்குக்
 கைம்மாறாகச் சோலைவானளாவிய தன் பெரிய கிளைகளாகிய
 கைகளால்மகரந்தத்தையும், தேனையும், பூக்களையும், ஏந்தி நிற்கிறது - என்ற
 இப்பாடலில்,
      வானளாவிய மரங்களில் பூக்களும் தேனும் மகரந்தமும் இயற்கையாகக் காணப்படஅதற்குக் கவி ஒரு கற்பனை செய்து உரைத்த நிலைத்திணைத் தற்குறிப்பேற்ற
 அணியைக் காண்க.]
 
    "சான்றோர் வருந்திய வருத்தமும் நமதுவான்தோய்வு அன்ன குடிமையும் நோக்கி"
 
     என - அன்ன என்பதூஉம், 
    "காமருதேர் வெய்யவன் எங்கும் கரம்பரப்பித்தேமருவு சோலை மலர்திறக்கும், -- தாமரையின்
 தொக்க இதழ்விரித்துப் பார்க்கும், தொலைந்துஇருள்போய்ப்
 புக்க புரைகிளைப்பான் போல்"
 
 எனப் போல் என்பதூஉம் வந்தன. ஏனையவும் வந்துழிக் காண்க.             (37)  | 
 |  |