பக்கம் எண் :

 26

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

தொடர்
நூற்பா 
எண்

இயல்
நூற்பா
எண்

631

 
இருவகைக் காப்பியங்களும் ஒருவகைப் பாட்டானும் பலவகைப் பாட்டானும்
பாடப்படும் என்பதும், இடையிடையே உரைநடையும் விரவிவரும், வேற்று
மொழிகளும் விரவிவரும் என்பதும்.
12
632
 
ஒரு செய்யுளின் இறுதி அடுத்த செய்யுளுக்கு முதலாகத் தொடுக்கப்படுவது
சொற்றொடர்நிலை என்பது.
13
633
 
வைதருப்பம் எனவும் கௌடம் எனவும் குணவணி இரு பெரும் பகுதிகளை
உடையது என்பது.
14
634
 
நெகிழிசையில்லாச் செறிவு முதலாக வைதருப்பம் பத்துக் கூற்றினை
உடையது என்பது.
15
635
 
கௌடம் செறிவு முதலிய பத்துக் குண அலங்காரங்களோடும் கூடாது
சிலவற்றொடு கூடி இயலும் என்பது.
16
636
 
அலங்காரம் பொருளணி, சொல்லணி என்ற இரு பெரும் பாகுபாடுகளை
உடையது என்பது.
17
637
 
தன்மை முதலாகப் பாவிகம் ஈறாகப் பொருளணி முப்பத்தைந்து வகைப்படும்
என்பது.
18
638 தன்மை அணியின் இலக்கணமும் வகைகளும் இவை என்பது, 19
639 உவமை அணியின் பொது இலக்கணம் இஃது என்பது. 20
640
 
உவமைவிரி - விரிஉவமை முதலாக ஏதுஉவமை ஈறாக முப்பத்திரண்டாகும்
என்பது.
21
641
 
மிகுதலும் குறைதலும் முதுலாக உவமை பற்றிய வழுவமைதியின் பகுதி
இவை என்பது.
22
642 உவம உருபுகள் இவை என்பது. 23
643 உருவகத்தின் பொது இலக்கணம் இஃது என்பது. 24
644
 
உருவக விரி - தொகை உருவகம் முதலாக இருபத்தொரு கூறுபாடுடையது
என்பது.
25
645உருவகம் உவமை இவைகளுக்குப் புறனடைச் செய்தி இஃது என்பது.26