| 
				
					| 
																		| 
	
    "அறிந்து வேறாய் அறையாது குறிப்பினும்தொழிலினும் அரிதுஉணர் தொழில்திறம் நுட்பம்
 ஆகம் என்மனார் அறிந்திசி னோரே."                - மு. வீ. பொ. 85
 
	
    "கருதிய பிறக்கோள் கண்டு குறிநிலைச்செங்கையின் நிகழ்தலும் செப்பே நுட்பம்."                     - ச. 110
 
	
    "பிறன்கருத்து ஓர்ந்து கருத்தோடு கூடப் பெறுசெய்கையால்உறுவிடை ஈவது நுட்பம்."                              - குவ. அ. 84]
 
     குறிப்பினான் வரும் நுட்பம் வருமாறு : 
	
    "காதலன் மெல்உயிர்க்குக் காவல் புரிந்ததால்பேதையர் ஆயம் பிரியாத - மாதர்
 படர்இருள்கால் சீக்கும் பகலோனை நோக்கிக்
 குடதிசையை நோக்கும் குறிப்பு"
 
 
 என வரும். 
     [மகளிர் ஆயத்தைவிட்டு நீங்காத தலைவி, படர்ந்த இருட்டைப் போக்கியகதிரவனை நோக்கிப் பின் மேற்குத் திசையை நோக்கிய குறிப்பு, தலைவனுடைய
 மென்மையான உயிருக்குப் பாதுகாவலைத் தந்தது - என்ற இப்பாடலில்,
 
     தொழிலினான் வரும் நுட்பம் வருமாறு :
 
	
    "பாடல் பயிலும் பணிமொழிதன் மென்பணைத்தோள்கூடல் அவாவால் குறிப்புணர்த்தும் -- ஆடவற்கு,
 மென்தீந் தொடையாழின் மெல்லவே தைவந்தாள்
 இன்தீங் குறிஞ்சி இசை"
 
 
 என வரும். பிறவும் அன்ன.                                           (41)  | 
 |  |