பக்கம் எண் :

 அணியியல் - இலேசவணி

273 

பிறர் மதம்

 662. புகழ்வது போலப் பழித்திறம் புனைதலும்
     பழிப்பது போலப் புகழ்புலப் படுத்தலும்
     அவையும் அன்ன என்று அறைநரும் உளரே.

     இது பிறர் மதம் பற்றி மேலதற்கு ஓர் ஒழிபு கூறுகின்றது.

     இ-ள்: ஒன்றனைப் புகழ்ந்தாற்போலப் பழித்து உரைத்தலும், பழித்தாற்போலப்
 புகழ்ந்து உரைத்தலும் என்னும் இவ்விரண்டும் அவ்விலேசத்தின் பாற்படும் என்று
 கூறுவாரும் உளர் என்றவாறு.

     [இக்கருத்து மான் அலங்காரத்தில் குறிப்பிடப்டவில்லை. இச்செய்திகள்
 நிந்தாத்துதி அலங்காரம், புகழ்வதின் இகழ்தல் அலங்காரம் என இருவேறு
 அணிககாக அந்நூலுள் சுட்டப்பட்டுள்ளன.]

    "இகழ்வதுபோன்ற இயற்கையின் வண்புகழ்
     நிகழ்தர உரைப்பது நிந்தாத் துதியே."                       - மா. 228 

     மதித்துஒரு பொருளை வழாஅதுஉள் ளுறுத்தித்
     துதிப்பது போன்றுஇகழ் வதுதுதி நிந்தை."                    - மா. 229 

 என்பது காண்க.

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 66 ; மு. வீ. பொ. 87

    "இகழு மொழியிற் புகழ்தலும் ஏத்திய இன்னுரையிற்
     புகழு நடையிற் பழித்தலும் போற்றுவர் பொற்றொடியே."       - வீ. 169] 

     புகழ்வதுபோலப் பழித்தல் வருமாறு :

    "மேய கலவி விளைபொழுதும், நம்மெல்லென்
     சாயல் தளராமல் தாங்குமால் ; -- சேயிழையாய்

      35-36