அணியியல் - இலேசவணி
275
நிரல்நிறையணி
663. நிரல்நிறை முன்னர் நிகழ்த்தியாங்கு இயலும்.
இ-ள்: நிரல்நிறையது இலக்கணம் ஆண்டுச் சொல்லதிகாரத்துக் கூறினாற்போல நடக்கும் ஈண்டும் என்றவாறு.
ஆண்டுச் சொல்லதிகாரத்துக் கூறியவாறு :
"பெயரும் வினையும்ஆம் சொல்லையும் பொருளையும் வேறு நிரல்நிறீஇ முறையினும் எதிரினும் நேரும் பொருள்கோள் நிரல்நிறை நெறியே" - இ. வி. 364
என்பதாம்.
[நிரல்நிறை -- வரிசையாக நிறுத்துதல்.
ஒத்த நூற்பாக்கள்
"நிரல்நிறுத்த இயற்றுதல் நிரல்நிறை அணியே." - தண்டி, 67
"நிரல்நிறை யாவது சொல்லும் பொருளும் நிரனிறுத்தல்." - வீ. 170
"குறித்திடும் பெயர்வினை கூறிய செய்யுளின் நெறிப்பட நிரல்உறல் நிரல்நிறை ஆகும்." -மா. 162