"மின்நிகர்ஆம் மாதே ! விரைச்சாந் துடன்புணர்ந்து
நின்நிகர்ஆம் மாதவிக்கண், நின்றுஅருள்நீ ; -- தன்நிகராம்
செந்தீ வரமலரும் செங்காந்தள் போதுடனே
இந்தீ வரம்கொணர்வல் யான்"
என வரும். (48)
[மின்னலை ஒத்த பெண்ணே ! நறுமணம் கமழும் சந்தன மரத்தில் படர்ந்து
உன்னை நிகர்த்து அழகோடு காணப்படும் குருக்கத்தியின் நிழலிலே நீ தங்கியிரு.
சிவந்த தீப்போல மலர்ந்து தமக்குத் தாமே நிகராகும் செங்காந்தன் பூக்களையும்