குவளை மலர்களையும் யான் பறித்து வருகிறேன் - என்று தோழி தலைவியைக்
குறியிடத்து உய்த்து நீங்கும் செய்தியைக் கூறம் இப்பாடலில்.
சந்தன மரத்தில் படரும் குருக்கத்தி போல, நீ தலைவனைத் தழுவுதற்கு உரிய
வாய்ப்பினை நினக்கு நல்கி யான் பிரிந்து போய், நின் ஒப்பனைக்கு ஆம்
மலர்களைப் பறித்து வருவேன் என்ற கருத்தைக் குறிப்பால் பெறப்பட வைத்த
குறிப்பெச்சச் செய்தி இவ்வணியாமாறு காண்க.
பரியாயம் - நேரிடையாகக் கூறாது சாமர்த்தியமாகக் கூறும் செய்தி.