பக்கம் எண் :

 அணியியல் - உதாத்தவணி

291 

உதாத்தவணி

 669. வியத்தகு செல்வமும் மேம்பாம் உள்ளமும்
      உயர்ச்சி புனைந்து உரைப்பது உதாத்தம் ஆகும்.

     இது நிறுத்தமுறையானே உதாத்தம் அலங்காரம் ஆமாறு கூறுகின்றது.

     இ-ள் :  வியக்கத்தக்க செல்வத்தும் மேம்பட்ட உள்ளத்தும் உயர்ச்சியை
 மிகுத்துச் சொல்லுவது உதாத்தம் என்னும் அலங்காரமாம் என்றவாறு,

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 74

    "தீங்கில் உதாரதை செல்வமும் உள்ளமும் சீர்மைசெப்பல்."       - வீ. 171 

    "உயர்வற உயர்ந்ததை வியந்துரைக் குமதே
     மயர்வற உதாத்தம் எனவகுத் தனரே."                       - மா. 238 

    "அதுவே,
     பொருள்கொடை காந்தி பொற்புற கற்பே
     பெருவிறல் செல்வமென் பவற்றொடும் பெருகும்."             - மா. 239 

    "அவற்றுள்,
    பொருளினை மிகுத்துரைப் பதுபொருள் மிகுதி."
              - மா. 240 

    "கொடைநலன் விதந்துரைப் பதுகொடை மிகுதி"                - மா. 241 

    "காந்தியை மிகுத்துரைப் பதுவே காந்தி."                      - மா. 242 

    "காமர்கற்பு உரைப்பது கற்பின் மிகுதி."                       - மா. 243 

    "நயம்புணர் ஞானவீ ரியம்அமர் வீரமென்(று)
     இயம்பிய விறலும் ஒரிரண் டென்ப."                         - மா. 244 

    "கல்விச் செல்வமும் கவின்பொருள உடைமைச்
     செல்வமும் எனஇரு திறத்தவாம் செல்வம்"                   - மா. 245