என வரும்.
[பகைவர்களை அழிக்கும் போர்த்தொழிலையும், கொடிய கோபத்தையும் மத
மயக்கத்தையும் உடைய யானைகளையும் உடைய அசரன், தன் நறுமணம் கமழும்
மாலையை விரும்பிய பெண்களுடைய அழகு, அணிகலன், நாணம், நிறை இவை
தளராதபடி அவர்களிடத்தில் கருணைகாட்டித் தண்ணளி செய்யும் செங்கோலன்
ஆகாது கொடுங்கோலனாயுள்ளான் - என்ற இப்பாடலில்,
அரசனைக் கொடுங்கோலன் போற் கூறி அவள் தன் உரிமை மகளிரையன்றி
ஏனையர் பிறரை விரும்பாதவன் என்ற கருத்துப் பெறப்பட வைத்தமையானும்,
செங்கோலன் என்ற சிறப்பை மறுத்துக் கொடுங்கோலன் என வெளிப்படைச்
சொல்லாற் கிளந்தமையானும சிறப்பு அவநுதியணி அமைந்தவாறு காண்க.]