பக்கம் எண் :

 அணியியல் - அவநுதியணி

297 

     அவநுதி என்னாது "ஆகும்" என்றதனால் பிற அலங்காரங்களோடு கூடி
 வருவனவும் கொள்க.

     வினை பற்றிய சிலேடை அவநுதி வருமாறு :

    "நறஏந்து கோதை நலம்கவர்ந்து, நல்கா
     மறவேந்தன், வஞ்சியான் அல்லன் ; -- துறையின்
     விலங்காமை நின்று, வியன்தமிழ்நாடு ஐந்தின்
     குலம் காவல் பூண்டுஒழுகும் கோ."

 பிறவற்றின்கண் வருவனவும் வந்துழிக் காண்க.                             (51) 

     [தேன் பொருந்திய மாலையை அணிந்த, பெண்ணின் அழகினைத் தன்
 காட்சியால் கவர்ந்து பின் தன்தண்ணளியான் மீட்டும் தாராத வீரம்மிக்க இவ்வரசன்
 வஞ்சியான் அல்லன், (வஞ்சிக்காமல் இரான் ; கருவூர் என்ற ஓர்ஒரையே உடையவன்
 அல்லன்). நெறிமுறை தவறாது நாடாண்டு பரந்த சேர சோழ பாண்டிய கொங்கு
 தொண்டை நாடுகள் அனைத்தையும் காத்தல் தொழிலைச் செய்யும் அரசன் ஆவான்
 என்ற இப்பாடலில்,

     "வஞ்சியான் அல்லன்" என்ற தொடர் சிலேடைப பொருளால் குணஒழிப்பினைச்
 கட்டியவாறு காண்க.]                                                  51 

சிலேடையணி - இலக்கணமும் வகையும்

 671. ஒருவகைச் சொற்றொடர் பலபொருள் பெற்றி
     தெரிவுதர வருவது சிலேடை; அதுதான்
     செம்மொழி பிரிமொழி எனஇரு திறப்படும்.

     இது நிறுத்தமுறையானே சிலேடை அலங்காரம் ஆமாறு உணர்த்துகின்றது.

     இ-ள் :  ஒரு வகையான் நின்ற தொடர்சொல் பலபொருள்களது தன்மை தெரிய
 வருவது சிலேடைஅலங்காரமாம். அவ்வலங்காரம்தான் ஒரு வகையான்.