நின்று பலபொருள் படும் செம்மொழிச் சிலேடையும், ஒரு வகையான் நின்ற
சொல்லைப் பிரித்துத் தொகை வேறுபடுத்துப் பல பொருள் கொள்ளப்படும்
பிரிமொழிச் சிலேடையும் என இரண்டு கூறுபடும் என்றவாறு.
"தான்" என்ற மிகையானே, தொடர்சொல்லே அன்றி ஒருசொல்லே
பலபொருள்பெற்றி தெரிதரவரினும்,அவ்வலங்காரமாம் எனக்கொள்க.
[இவ்வணி பலபொருள் சொற்றொடரணி எனவும் கூறப்பெறும்.