பக்கம் எண் :

 அணியியல் - சிலேடையணி

299 



     "மொழிவினை முரணுதல் முரண்வினைச் சிலேடை."

- மா. 152 

     "இயல்புடையப் பொருள்கட்கு உளதுஇலது இரட்டுதல்
     நியமித் துரைத்தல் நியமச் சிலேடை."

- மா. 153 

     "விளம்பிய நியமம் விலக்குதல் விலக்கே."

- மா. 154 

     "சாதி முதலாச் சாற்றிய நான்கொடும்
     தீதறு பெயரினும் வினையினும் திரிந்து
     மேதக விரோதத்து அறைவது விரோதம்."

- மா. 155 

     "அவிரோ தத்தறை வதுஅவி ரோதம்"

- மா. 156 

     "சிலேடை என்ப திரிசொல் பலஇணைந்து
     இருபய னாக ஒருதொடர்பு உரைத்தலே."

- தொ. வி. 367 

     "ஒருவகை யாம்தொடர் உரைபல பொருளின்
     ஒயல்பு புலப்பட இயம்பல் சிலேடை."

- மு. வீ. பொ. 99 

     "பல்பொருள் தரூஉம்பல் பதங்கள் புணர்த்துச்
     சொல்வது பல்பொருள் சொற்றொடர் அணிஅது
     புனைவுளி புனைவிலி இருமைமூ வகைத்தே"

- ச. 51 

     "தெரியும் பலபொருள் சொற்களின் சேர்க்டிக சிலேடைஅது
     வருணிய மேஅ வருணிய மேஇரு மைஎனலாய்
     மருவி வரும்."

- குவ. 26] 

    செம்மொழிச் சிலேடை வருமாறு :

     "செங்கரங்க ளான்இரவு நீக்கும்; திறம்பயின்று
     பங்கள, மாதர் நலம்பயில, -- பொங்குஉதயத்து
     ஓர்அழி வெய்யோன், உயர்ந்த நெறிஓழுகும்,
     நீர்ஆழி சூழ்ந்த நிலத்து"

 என வரும்.

    ஆதித்தன்மேல் செல்லுங்கால், கரம் - கதிர்; இரவு - இருள்;
 மாதர் - காதல்; நலம் - அழகு; பயிறல் - உண்டாதல்; பொங்குதல் -
 மேல்நோக்கி வளர்தல்; உதயம் - தோற்றம்; ஆழி - தேர்க்கால்;
 வெய்யோன் - ஆதித்தன்; நெறி - வழி.