இரத்தலும்; மாதிடத்தான் - சிவனும், மிக்கதிட்பத்தை உடைய சோழனும்; மன்மதன் -
காமனும், மன்னரது வலியும்; மதி - சந்திரனும், அறிவும்; குமுதம் - ஆம்பலும்,
மகிழ்ச்சியும்; தனதன் - குபேரனும், தனத்தை உடைய சோழனம்; இருநிதி - சங்கநிதி
பதுமநிதியும், மிக்க பொருளும்.
"இயலும்" என்றதனான் இவ்வாறன்றிப் பிற வேறுபாட்டான் வருவனவும்
கொள்க. அவை வந்துழிக் காண். (53)
[இப்பாடல் சூரியன் முதலாயினாருக்கும் சோழனுக்கும் சிலேடை. இரவியும்
கரத்தால் இரவு ஒழிக்கும்; சோழனும் அன்னன். சிவபெருமான் மன்தனை மாறு
அழிக்கும்; சோழனும் மன் மதனை மாறு அழிப்பன். மதிதோன்றிக் குமுதத்தை
அளிக்கும்; சோழனும் மதிதோற்றிக் இருநிதிக்கோன் - எனச்
சிலேடைப்பொருளான், மாறுபாடின்றிச் சூரியன், சிவபெருமான், சந்திரன்
குபேரன் ஆகியோருக்குச் சோழன் ஒப்பாயினமை காண்க.
பிற விகற்பங்களை மாறனலங்காரத்துள் காண்க.] 53