பக்கம் எண் :

 314

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     இது நிறுத்தமுறையானே விரோதம் என்ற அலங்காரம் கூறுகின்றது.

     இ-ள் :   மாறுபட்ட சொல்லானும் பொருளானும் மாறுபாட்டுத்தன்மை
 விளைவுதோன்ற உரைப்பது விரோதம் என்னும் அலங்காரமாம் என்றவாறு.

     [இது தொடை வகையுள் ஒன்றாகிய முரண்தொடை ஆகும்.

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 82

    "சொல்லும் பொருளும்,
     புல்லும் விரோதம் புணரின் முரண்என்ப பொற்றொடியே."       - வீ. 173 

    "சொற்பொருள் முரணத் தொடுப்பது விரோதம்."                - மா. 181 

    "அதுவே,
     சொல்லும் பொருளும் ஒருமையின் பன்மையின்
     தம்மின் முரணும் சால்புஒரு நான்காய்ச்
     சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளொடும்
     ஒல்லுபு முரணலின் ஓரைந் தாகும்."                         - மா. 182 

    "விரோதம் என்ப விகற்ப முரண்படு
     மன்னிய சொற்பொருள் உன்னியம் ஆக்கலே."           - தொ. வி. 360 

    "முரணப் படும்பொரு ளொடுமொழி யானும்
     முரணப் படுமியல்பு ஆக்கமுன் தோன்றல்
     விரோதம் எனப்பெயர் வேண்டப் படுமே."            - மு. வீ. பொ. 38] 

     சொல் விரோதம் வருமாறு :

    "சோலை பயிலும் குயில்மழலை சோர்ந்துஅடங்க,
     ஆலும் மயில்இனங்கள் ஆர்த்துஎழுந்த; - ஞாலம்
     குளிர்ந்த; முகில்கறுத்த; கோபம் சிவந்த;
     விளர்த்த, துணைபிரிந்தார் மெய்"

 என வரும்.