என வரும். பிறவும் அன்ன.
[காலையினும் மாலையினும், அழகிய கரிய யானைத் தோலினைச் செம்மேனியில்
போர்த்து வெண்ணீறணிந்து பசிய கொன்றை மாலை சூடியுள்ள பெருமானைச்
சிற்றம்பலத்தில் நம் கைகளைக் கூப்பித் திருவடிகளில் விழுந்து தொழுதால், நம்
பண்டைப் பல் பிறவியின் வினைகளும் நம்மை விடுத்து நீங்கி விடும் - என்ற
இப்பாடலில்,
காலை, மாலை-கை, கால்-மேலை கீழ்,-கருமான், வெண்ணீறு, செம்மேனி,
பைந்தார் - பெரு, சிறு - என்ற முரண்பட்ட பொருளைத் தரும் சொற்கள்
அமைந்தவாறு காண்க. இது பொருள் பற்றிய முரண்.]