பக்கம் எண் :

 316

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     "இயற்கை" என்ற மிகையானே, சிலேடை பற்றியும் முரண் வரும் எனக் கொள்க.

     வரலாறு :

    "இனமான் இகல எளியவே யேனும்,
     வனம்மேவு புண்டரிகம் வாட்டும்; - வனம்ஆர்
     கரிஉருவங் கொண்டு, அரிசிதறிக் காயும்,
     விரிமலர்மென் கூந்தல் விழி"

 என வரும். வனம் - நீரும் காடும்; புண்டரிகம் - தாமரையும் புலியும்; வனம் -
 வண்ணமும் காடும்; கரி - கரியும் யானையும்; அரி - செவ்வரியும் சிங்கமும்; சிதறல் -
 பரத்தலும் உடைத்தலும்.                                              (56) 

     விரிந்த மலர்கள் சூடிய மெல்லிய கூந்தலை உடைய இத் தலைவியின் விழிகள்
 மான்களின் விழியோடு மாறுபடும் அளவின; இவை நீரில் வாழும் தாமரையைத் தம்
 வனப்பால் தோற்கடிப்பன; கருநிறத்தோடு அரிகள் பரந்து எம்மைக் கோபிப்பன -
 என்பது உரிய பொருள்.

     சொற்களைக் கொண்டு நோக்குமிடத்து, இவள் விழிகள் மான்கள் பகைக்குமாறு
 எளிய எனினும் காட்டிலுள்ள புலிகளை வாட்டும்; காட்டில் உள்ள யானைகளின்
 வடிவத்தைக் கொண்டு சிங்கங்கள் சிதறி ஓடுமாறு கோபிக்கும் - என்ற முரண்பட்ட
 பொருள் சிலேடை முகத்தான் மேம்போக்காக அமைந்திருத்தல் காண்க. ஏனைய
 விகற்பங்களை மாறன் அலங்காரத்தில் காண்க.]                            56 

மாறுபடு புகழ்நிலையணி

 676. கருதிய பொருள்மறைத்து ஆங்குஅது பழித்தற்கு
         வேறுஒன்று புகழ்வது மாறுபடு புகழ்நிலை.

     [இது தெரிவில் புகழ்ச்சியணி எனவும் கூறப்படும்.