தொன்னூல் விளக்கமும் சந்திராலோகமும் குவலயானந்தமும் பழிப்பது போலப் புகழ்வதனையும், புகழ்வதுபோலப் பழிப்பதனையும் இவ்வணியுள் அடக்கும்.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும் - தண்டி 84
"மாறி இகழ்மொழி வண்புக ழாய்நுவ லாச்சொல்வரும்." - வீ. 174
"இகழ்வது போன்ற இயற்கையின் வண்புகழ்
நிகழதர உரைப்பது நிந்தாத் துதியே." - மா. 228
"மதித்தொரு பொருளினை வழாஅதுள் ளுறுத்துத்
துதிப்பது போன்றிகழ் வதுதுதி நிந்தை." - மா. 229
"புகழ்மாற்று என்ப புகழ்வதுபோல் இகழ்ந்து
இகழ்வது போல்புகழ்ந்து இயம்பிய நிலையே." - தொ. வி. 348
"பழிப்பது போலும் பான்மையின் மேன்மை
புலப்படல் புகழாப் புகழ்ச்சி யாகும்." - மூ. வீ. பொ. 100
"நிந்தையால் துதியும் துதியால் நிந்தையும்
வந்துற அமைவது வஞ்சப் புகழ்ச்சி." - ச. 55
"நிந்தையி னாற்றுதி யும்துதி யால்நிந்தை யும்பணிக்க
வந்திடில் வஞ்சப் புகழ்ச்சி." - குவ. அ. 30]
"போர்வேலின் வென்றதூஉம், பல்புகழால் போர்த்ததூஉம்,
தார்மேவு திண்புயத்தால் தாங்குவதூஉம், - நீர்நாடன்
தேர்அடிக்கூர் வெம்படையால் காப்பதூஉம், செங்கண்மால்
ஓர்அடிக்கீழ் வைத்த உலகு"
என வரும். தேர்அடி - சக்கரம்.
சோழன் போரிடும் வேலினால்வென்று கைப்பற்றியதும், தன் புகழால் மூடி மறையச் செய்ததும், தன் புயவலியால் காப்பதும், தன் ஆணைச்சக்கரத்தால் செங்கோல் திருமால்ஒரே அடியால் அளந்த நில வுலகமாகும் - என்ற இப்பாடலில், |
|
|