பக்கம் எண் :

 அணியியல் - புகழாப் புகழ்ச்சியணி

321 

 போலப் பழித்திறம் புனைதல் ஒன்றனையே புகழ்ந்தாற் போலப் பழிப்பது. இவை
 அன்ன அன்றி, முறையே ஒன்றனைப் பழிப்பது வேறொன்றற்குப் புகழாய்த்
 தோன்றுதலும், ஒன்றனைப் புகழ்வது வேறொன்றற்குப் பழிப்பாய்த் தோன்றுதலும்
 ஆம் என்று உணர்க.                                                 (58) 

     [மாறுபடு புகழ்நிலையாவது - ஒன்றனைக் குறிப்பால் பழிப்பதற்கு அதனோடு
 எவ்விதத் தொடர்பும் இல்லாப் பிறிது ஒன்றனை வெளிப்படையாகப் புகழ்தலாம்.

     புகழாப்புகழ்ச்சியவாது - ஒன்றனைக் குறிப்பால் புகழ்வதற்கு அதனோடு
 தொடர்புடைய பிறிதொன்றனை வெளிப்படையாகப் புகழ்ந்து அதனை
 வெளிப்படையாகப்பழிப்பதாம்.]                                          58 

நிதரிசனவணி

 678. ஒருவகை நிகழ்வதற்கு ஒத்தபயன், பிறிதிற்குப்
     புகழ்மை தீமை என்றுஇவை புலப்பட
     நிகழ்வது ஆயின், நிதரிசனம் அதுவே.

     இது நிறுத்தமுறையானே நிதரிசன அலங்காரம் கூறுகின்றது.

     இ-ள் :   ஒருவகையான் நிகழ்வது ஒன்றற்குப் பொருந்திய பயனைப் பிறிது
 ஒன்றற்கு நன்மை புலப்பட நிகழ்வது ஆதல், தீமை புலப்பட நிகழ்வது ஆதல் செய்து,
 அதனைச் சொல்லுவது நிதரிசனம் என்னும் அலங்காரமாம் என்றவாறு.

     [இது சுட்டு எனவும் காட்சியணி எனவும் கூறப்பெறும்.

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 85

     "...சுட்டாம் நிகழ்பயன் கொள்பொருளில்
     வேறுபட நன்மைதீமை வெளிப்படல் மெல்லணங்கே."           - வீ. 174 

     41-42