பக்கம் எண் :

 322

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    "இவ்வகைக்கு உலகத்து இவைநிகழ் திறம்எனும்
     அவ்வகைக்கு அவைபோன்று ஒருபொருள் திறங்களைக்
     கோட்டமில் குணம்தீங்கு எனும்இரு குறிப்பின்
     காட்டும் என்றே கழறுதல் நிதரிசனம்."                       - மா. 139 

    "ஒருவகை யானொழு குவதொன் றற்குப்
     பொருந்தின ஒருபயன் வேறொன் றற்கு
     நன்மை தீமை நாட்டுவது நிதரிசனம்."                 - மு. வீ. பொ. 101 

    "வாக்கியம் பதம்பொருள் காட்சிமூ வகைத்தே."                  - ச. 41 

    "வாக்கியப் பொருளிரண் டற்கா ரோபம்
     புனைதல் வாக்கியப் பொருட்காட்சி என்ப."                    - ச. 42 

    "ஒன்றன் இயல்மற்று ஒன்றினில் ஏற்றிடல்
     பதப்பொருள் என்னப் பாத்தனர் புலவர்."                     - ச. 43 

    "நற்பொருள் தீப்பொருள் நவிலும்இவ் விரண்டினுள்
     ஒன்றைச் செய்கையின் உணர்த்தல் பொருளே."                - ச. 44 

    "சொற்றிடொப் பான இருவாக் கியங்களில் தோன்றுபொருட்கு
     ஒற்றுமை என்பதின் ஆரோபம் காட்சி."                  - குவ. அ. 19 

    "நேரும் பதப்பொருள் ஆரோ பமும்முன் நிகழ்த்துவதாம்."   - குவ. அ. 19 

    "தீப்பய னாவது நற்பய னாவது செய்கையினால்
     வாய்ப்பொடு காணப் புரிவதும் அவ்வணி."               - குவ. அ. 19] 

     நன்மை புலப்பட வரும் நிதரிசன அலங்காரம் வருமாறு :

    "பிறர்செல்வம் கண்டால் பெரியோர் மகிழ்வும்
     சிறியோர் பொறாத திறமும் - அறிவுறீஇ,
     செங்கமலம் மெய்மலர்ந்த; தேங்குமுதம் மெய்அசைந்த;
     பொங்குஓளியோன் வீறுஎய்தும் போது"

 என வரும்.