பக்கம் எண் :

 அணியியல் - பரிவருத்தனையணி

327 

   "இழிவுஈத்து உயர்வுஉறல் மாற்று நிலையே."                      - ச. 78

   "குறைவாம் பொருளைக் கொடுத்தகி கப்பொருளைக்கொளலுக்கு
    அறைபேரும் மாற்று நிலையணி".
                         - குவ. அ. 52

    வரலாறு:

   "காமனை வென்றோன் சடைமதியும் கங்கையும்,
    தாம நிழல்ஒன்று தாம்கொடுத்து, - நாமப்
    பருவாய் அரவின் பணமணிகள் தோறும்,
    உருஆ யிரம்,பெற் றுள"


 என வரும்.                                                         (61)

    மன்மதனை வென்ற சிவபெருமானுடைய சடையில் தங்கி யிருக்கும் பிறைமதியும்
 கங்கையும் தாம் ஒரு பிம்பத்தையே வழங்கி, அச்சிவபெருமான் அணிந்த அஞ்சத்தக்க
 பருத்த வாயை உடைய பாம்புகளின் படங்களில் உண்டாகிய மணிகள் தோறும், தத்தம்
 உருவம் பிரதிபிம்பிப்பதால், பல பிம்பங்களை உடையவாயின - என்ற இப்பாடலில்,

    ஒரு பிம்பத்தைக் கொடுத்துப் பல பிம்பங்களைப் பெறுதல் பரிவருத்தனையாகும்.
 இதற்கும் பரிவிருத்திக்கும் உள்ள சிறு வேறுபாட்டினைப் பிற்சேர்க்கையில் காண்க.] 61

வாழ்த்தணி


 681. இன்னார்க்கு இன்னது இயைக என்றுதாம்
     முன்னியது கிளத்தல் வாழ்த்துஎன மொழிப".

    இது நிறுத்தமுறையானே வாழ்த்து அலங்காரம் கூறுகின்றது.

    இ-ள் :  இன்ன தன்மையை உடையார்க்கு இன்னது நிகழ்க என்று தாம்
 கருதியதனை விரிப்பது வாழ்த்து என்னும் அலங்காரமாம் என்றவாறு.

    [இஃது ஆசியணி எனவும் கூறப்பெறும்.