அகம் புறம் என்ற இரண்டும் வகைபட வந்த அணிநலம் தழீஇச் செய்யுள் 
 இடவயின் புல்லிய நெறியின ஆதலின், செய்யுளை விளக்கி நிற்பதும் அணி 
 என்பதனை உட்கொண்டு, எழுத்துப்படலத்தினுள் வல்லோர் அணிபெறச் செய்வன 
 செய்யுள் என்று கூறியதற்கு ஏற்பப் பொருளைப் புலப்படுப்பதும் செய்யுளை 
 விளக்குவதும் ஆகிய அணி பற்றிய இயலைப் பொருட்பகுதிக்கும் செய்யுட்பகுதிக்கும் 
 இடையே வைத்து அது பொருளுக்கும், பொருட்கு இடனாகும் செய்யுட்கும் 
 உபகாரப்படுமாற்றைச் சிங்க நோக்காகக் கொள்ளவைத்துள்ளார்.பொருட்கு இடம் 
 செய்யுள் ஆதலின், அச்செய்யுள் பற்றி அமைந்த செய்யுளியலும் பொருட்படல 
 இயல்களுள் ஒன்றாயிற்று என்பதும் அறிக.                                  2