அணியாம் என்பது அவர் கருத்து. ஒருங்கு என்பதே அன்றி மூன்று தாழிசையுள்
மூன்று பொருள்கூறி "எனவாங்கு" என்பதொரு சொல்லான் முடிந்த வழியும் எனவாங்கு
என்பதொரு மொழியில் "என" என்பது ஓர் அலங்காரம் எனல் வேண்டும் ஆகலான்
அவ்வாறு வரையறுத்துக் கூறல் அமையாது என்பது. பிறவும் அன்ன.
இனி, அவற்றைப் பொருள் உறுப்பு என்பதல்லது, அணி என்பவாயின்,
சாத்தனையும் சாத்தனால் அணியப்பட்ட முடியும் தொடியும் முதலாயவற்றையும்
வேறு கண்டாற் போல அவ்வணியும் செய்யுளின் வேறாகல் வேண்டும் என்பது.
இனி, செய்யுட்கு அணி செய்யும் பொருட்படை எல்லாம் கூறாது, சிலவே கூறி
ஒழியின், அது குன்றக்கூறலாம் என்பது. அவை யாவை எனின்,